Kathir News
Begin typing your search above and press return to search.

"மோடி என் நண்பர்" - வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த தீபாவளி கொண்டாட்டத்தில் ட்ரம்ப் புகழாரம்

"மோடி என் நண்பர்" - வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த தீபாவளி கொண்டாட்டத்தில் ட்ரம்ப் புகழாரம்

மோடி என் நண்பர் - வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த தீபாவளி கொண்டாட்டத்தில் ட்ரம்ப்  புகழாரம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Nov 2018 10:19 AM GMT

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த செவ்வாய் அன்று உயர் பதவியிலிருக்கும் இந்திய-அமெரிக்கர்களுடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது இந்தியாவை சிறந்த "வர்த்தக பேச்சுவார்த்தையாளர் " என வர்ணித்து இரு நாடுகளின் உறவையும் பாராட்டி பேசினார்.
வரலாற்று சிறப்புமிக்க வெள்ளை மாளிகையின் "ரூஸ்வெல்ட் அறையில்" விழாவின் விளக்கை ஏற்றும் முன்னர் "இந்தியாவுடன் ஆழமான உறவை கொண்டிருக்கிறது அமெரிக்கா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடனான நட்புக்கு நான் கடமைபட்டுள்ளேன்" என பேசினார் ட்ரம்ப். இந்தியாவின் மாபெரும் விழாக்களில் ஒன்றான தீபாவளியை ட்ரம்ப் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டாய் வெள்ளை மாளிகையில் இந்திய அமெரிக்கர்களுடன் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.டி.ஐ. செய்தி அறிக்கை படி, இரண்டு பெரும் ஜனநாயக நாடுகளுக்கிடையேயான சமீபத்திய "இந்திய - அமெரிக்க" வணிக ஒப்பந்தம் சார்ந்த பேச்சுவார்த்தையை குறிப்பிட்டு பேசிய ட்ரம்ப் "இந்தியாவுடன் சிறந்த வணிக ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம் . ஆனால் அவர்கள் சிறந்த வணிகர்களாக இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் வல்லவர்களாக திகழ்கிறார்கள் . எனவே அவர்களுடன் இணைத்து பணியாற்றி வருகிறோம்" என பேசியுள்ளார்.
இந்திய பிரதமர் உடனான தனது நட்பை ஆமோதித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மேலும் தனது மக்கள் இவான்க்கா, இவர் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்யும் முதல் உயர் அதிகாரியாவார். ஐவரும் பிரதமர் மோடியின் நட்பு வட்டத்தில் உள்ளார் என்பதை கூடுதல் தகவலாக பகிர்ந்து கொண்டார்.
கிட்டத்தட்ட 24 -ற்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்க உயர் அதிகாரிகளுடன், இந்திய தூதருக்கும் அழைப்பு விடுத்திருந்தார் ட்ரம்ப். இந்திய தூதுவர் திரு நவ் தேஜ் சிங் சர்னா, மற்றும் அவரின் மனைவி அவினா சர்னா மற்றும் அவரின் சிறப்பு உதவியாளர் பிரதிக் மத்தூர் ஆகியோர் கொண்டாட்டங்களுக்காக வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தது அறிய பண்புகளில் இருந்தது. சர்னா கூறுகையில் "இந்திய -அமெரிக்க" இடையேயான இரு நாட்டு உறவில் இது மிகச்சிறப்பான தருணம் " என்றார் . "உண்மை மிக நெருக்கமான, முன்பிருந்ததை விடவும் நெருக்கமான தருணம்" என அதை ஆமோதித்தார் ட்ரம்ப்.
"இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாட்டினுள் ஒன்று. இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு என்பது அமைதி, செழிப்பு , மற்றும் சுதந்திரத்திற்கான அரண் ஆகியவற்றிக்காக இணைந்து செயல்படும்" என அவர் கூறியதாக பி.டி.ஐ குறிப்பிட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டத்திற்காக வெள்ளை மாளிகையில் மூத்த "இந்திய-அமெரிக்கா" அதிகாரிகளை வரவேற்று பேசிய ட்ரம்ப் அவர்கள் " வெள்ளை மாளிகையில் நாம் தீபம் ஏற்றும் இவ்வேளையில் தங்களுடைய சொந்த வீட்டில், நகரத்தில் மற்றும் வழிபாடு தளங்களில் தீபம் ஏற்றும் அனைவருடனும் நாம் இணைந்து கொள்கிறோம். அமெரிக்க எனும் இந்நாடு நம்பிக்கையின் நிலம் . நம் தேசிய வாழ்வின் இரத்தின கம்பளத்தில் இந்த அற்புதமான மரபுகள் நெய்யப்பட்டிருப்பதை உண்மையில் நம் அதிர்ஷ்டம்" என அவர் தெரிவித்துள்ளார்
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுவாதை எண்ணி தான் சிலிர்ப்படைவதாகவும் தெரிவித்துள்ளார்.
"இத்தனை அழகான ஒரு நிகழ்ச்சியை வெள்ளை மாளிகையில் நடத்துவதை எண்ணி நான் பெருமைகொள்கிறேன். மிகவம் சிறப்பு வாய்ந்த மக்கள். அமேரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் இருக்கிற பௌத்தர்கள், சீக்கியர்கள், மற்றும் ஜைனர்கள் அனைவரும் கடைபிடிக்கிற மிகச்சிறப்பான ஒரு விடுமுறையை கொண்டாட நாம் அனைவரும் கூடியுள்ளோம். நூற்றுக்கணக்கான, மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் நண்பர்களோடும், குடும்பத்தினரோடும் ஒன்றுகூடி புதிய ஆண்டை குறிக்கும் வகையில் தீபம் ஏற்றி மகிழ்கிறார்கள். மிகச் சிறப்பான புதிய ஆண்டு " என அவர் தெரிவித்தார்.
இந்திய மற்றும் தென் கிழக்கு ஆசிய பாரம்பரியத்தை கொண்ட கடுமையாக உழைக்கும் குடிமக்களுக்கு உறைவிடமாக அமைந்தது நம் நாட்டிற்கு கிடைத்த ஆசீர்வாதம். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்த பெருமைமிகு ஒரு அமெரிக்க குடும்பம் . ஒப்புக்கொள்வீர்கள் தானே? ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். அதை சரி என நம்புவதே சிறந்தது. என அவர் பேசியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் முதல் தீபாவளி கொண்டாட்டாட்டம் 2003 ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் அவர்கள் பதவியில் இருந்த பொது நிகழ்ந்தது ஆனால் அவர் ஒருபோதும் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டது இல்லை. அவர் சார்பாக உயர் அதிகாரிகளே கலந்து கொள்வர். மேலும் இந்த விழா வெள்ளை மாளிகை வளாகத்தின் ஒரு பகுதியான எக்சிகியூடிவ் அலுவலக கட்டிடத்தின் இந்திய உபச்சார அறையில் நிகழும் .
2003 ஆம் ஆண்டு தொடங்கி தீபாளி கொண்டாட்டம் என்பது வெள்ளை மாளிகையின் வருடாந்திர மரபுகளில் ஒன்றாகி விட்டது . 2009 ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் விழா தீபத்தை ஏற்றி துவக்கி வைத்தார் . இந்நிகழ்வில் அப்போது 200 பேர் வரை பங்கேற்றனர் .
2013 ஆம் ஆண்டில் அந்நாட்டின் அப்போதைய முதல் குடிமகளான மிஷேல் ஒபாமா கிழக்கு அரையில் தீபாவளி கொண்டாடினார். அந்நிகழ்விற்க்கு சற்று முன்பாக மாநில உணவு உண்ணும் அறையில் உள்ளூர் மாணவர்களுடன் வடஇந்திய நடன நிகழ்ச்சியில் ஆவர் பங்கேற்றிருந்தார் . 2016 இல் ஓவல் அறையில் தன்னுடைய நிர்வாகத்தில் இருந்த இந்திய அமெரிக்கா அதிகாரிகளுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் ஒபாமா.
2016 ஆம் ஆண்டு துணை அதிபர் பிடேன் அவர்கள் தன்னுடைய அதிகாரபூர்வ இல்லத்தில் தீபாவளி விருந்தளித்தார். 2017 ஆம் ஆண்ட ட்ரம்ப் அவர்கள் முதன் முதலாய் தீபாவளி கொண்டாட்டத்தை ஓவல் அறையில் ஆம்ப் நிகி ஹாலே மற்றும் தன்னுடைய நிர்வாகத்திலுள்ள மூத்த அதிகாரிகளுடனும் மற்றும் சிறு குழுவிலான இந்திய அமெரிக்கர்களுடனும் கொண்டாடினார்.
ஆண்டுகள் கடந்ததில், தற்போது இந்திய அமெரிக்கர்களால் பென்டகனிலும், மாநில துறைகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்திய உட்குழுவினரால் தலைநகரில் நடத்தப்படும் தீபாவளி விழாக்களில் பிரதிநிதிகளும் மற்றும் செனட்டர்களும் பங்கேற்று வருவது கவனிக்கத்தக்கது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News