Top
undefined
Begin typing your search above and press return to search.

வருமான வரி தாக்கல் செய்யாத 80 ஆயிரம் பேர் - மத்திய அரசின் திட்டத்தால் குறுக்கு வழி தடைபட்டது

வருமான வரி தாக்கல் செய்யாத 80 ஆயிரம் பேர் - மத்திய அரசின் திட்டத்தால் குறுக்கு வழி தடைபட்டது

SG SuryahBy : SG Suryah

  |  15 Nov 2018 7:30 PM GMT





நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தார். ₹500, ₹1000 நோட்டுகள் மட்டும் ₹15.44 லட்சம் கோடிபுழக்கத்தில் இருந்தன. ஒட்டுமொத்தமாக ₹18 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது.



இந்த நடவடிக்கையால், உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வீட்டில் கறுப்புப் பணமாகப் பதுக்குவதும், ஊழல் செய்வதும் தடுக்கப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் ஊழலும், கறுப்புப் பணம் புழங்குவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகளைத் தடுத்தல், தீவிரவாதத்துக்குப் பணம் செல்லுதைத் தடுத்தல், பொருளாதாரத்தைச் சீர்படுத்துதல், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றைச் செயல்படுத்துவதிலும் பண மதிப்பிழப்பு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது



பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிந்தைய காலத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாத எண்பதாயிரம் பேர் மீதான நடவடிக்கை எடுக்க உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்புக்குப் பிந்தைய காலத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரித்துறை அறிவிக்கை அனுப்பியது. இதையடுத்து இரண்டே கால் இலட்சம் பேர் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் அறிக்கை தாக்கல் செய்யாத 80 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.





Next Story