Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் : பிரதமர் மோடி உறுதி

தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் : பிரதமர் மோடி உறுதி

SG SuryahBy : SG Suryah

  |  16 Nov 2018 4:07 PM GMT

கஜா புயல் பாதிப்புகள் தொடர்பாக பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு அறிந்தார். இதன் பின்னர், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்று உறுதி அளித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
https://twitter.com/narendramodi/status/1063456453577588736?s=19
மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் அளித்து வருவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1063450433082064898?s=19
Next Story