Top
undefined
Begin typing your search above and press return to search.

காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

SG SuryahBy : SG Suryah

  |  15 Nov 2018 7:37 PM GMT





ஜம்மு காஷ்மீரில் டிசம்பர் மாதம் 19ம் தேதிக்கு ஆளுநர் ஆட்சி முடிவுக்கு வர இருப்பதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளது. மெஹ்பூபா முப்தியின் கூட்டணி அரசில் இருந்து பா.ஜ.க விலகியதை அடுத்து, அங்கு யாருக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.



இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி அங்கு ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆறுமாத காலக்கெடு நிறைவடைந்த பின்னரும், தேர்ந்தெடுக்கப்படாத அரசு இல்லாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். 87 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியமும் இப்போதைக்கு இல்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி  லண்டனில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தானில் மோசமான நிர்வாகம் நடக்கிறது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. அதனால்  நான்கு மாகாணங்களைக் கூட கையாள முடியவில்லை. "காஷ்மீரை இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ கட்டுப்படுத்தக் கூடாது, மாறாக காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக உருவாக அனுமதிக்கப்பட வேண்டும்" என கூறி இருந்தார். காஷ்மீர் மாநிலம் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கூறிய கருத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளார்.



இந்தக் கருத்தை வரவேற்றுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் குறித்து சாகித் அப்ரிடி கூறுவது சரி தான் என்று தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு, காஷ்மீரை எப்படி சமாளிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.






Next Story