Top
undefined
Begin typing your search above and press return to search.

வெள்ள பாதிப்புகளிலிருந்து பத்திரமாக பாதுகாக்கப்பட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் : அ.தி.மு.க அரசுக்கு குவியும் பாராட்டுகள்

வெள்ள பாதிப்புகளிலிருந்து பத்திரமாக பாதுகாக்கப்பட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் : அ.தி.மு.க அரசுக்கு குவியும் பாராட்டுகள்

SG SuryahBy : SG Suryah

  |  15 Nov 2018 8:06 PM GMT

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது. இந்தக் கஜா புயல் நேற்று மாலை கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதன் காரணமாகக் கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை முதல் அதிகனமழை வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கனமழை மற்றும் புயலைச் சமாளிக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழக அமைச்சர் உதயகுமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கஜா புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் நேற்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்குச் செல்லுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் நேற்று இரவு 11.10 மணி நிலவரப்படி, 6 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 72,498 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20,084 குடும்பங்களில் உள்ள 72,498 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, 368 அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 28,876 பெண்களும், 11,330 பெண்களும் அடக்கம்.
https://twitter.com/tnsdma/status/1063130011547271168
அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை களத்தில் இருந்து மீட்புப்பணிகளையும், அரசு முகாம்களையும் பார்வையிட்டு பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர். அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் கடும் உழைப்பை கண்டு இத்தனை நாட்களாக தமிழக அரசை விமர்சித்து வந்த பலரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசை பாராட்டி வருகின்றனர்.
https://twitter.com/Stalin__SP/status/1063117410566266881
https://twitter.com/Ahmedshabbir20/status/1063126630552358912
https://twitter.com/NairShilpa1308/status/1063128088639229954
https://twitter.com/itisprashanth/status/1063125808716242944
Next Story