Top
undefined
Begin typing your search above and press return to search.

தவறான கருத்துக்களை பரப்பியதால் ராகுல்காந்தி மீது மும்பை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு

தவறான கருத்துக்களை பரப்பியதால் ராகுல்காந்தி மீது மும்பை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு

SG SuryahBy : SG Suryah

  |  15 Nov 2018 7:23 PM GMT


வீர் சாவர்க்கர் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் கொண்டவர். இவரைப்போல் ஆங்கிலேயரால் 50ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டவர் வேறு யாரும் கிடையாது. ஆங்கிலேயர் கொடுத்த இந்தத் தண்டனையில் இருந்தே அவர் எந்த அளவுக்கு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார் என்பதை அறிய  முடியும்.





அவர் ஆங்கிலேயரை உண்மையாக எதிர்த்ததால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டார்.இந்திய சுதந்திரத்திற்காக இந்தியாவில் அபிநவ் பாரத் சங்கமும் , லண்டனில் சுதந்திர இந்திய சங்கமும் உருவாக்கினார். இந்திய விடுதலை இயக்கம்-1857 என்ற நூலை எழுதினார். இந்து மகாசபையை உருவாக்கினார். இவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி. தீண்டாமையை ஒழிக்கப்பாடுபட்டார். இப்படி பல்வேறு பரிணாமங்களை கொண்டவர்.



இந்த நிலையில் இவரைப் பற்றி தவறான தகவல்களை கூறியதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது மும்பையில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீர்சாவர்க்கரின் வம்சாவளியை சேர்ந்த ரண்ஜீத் சாவர்க்கர் என்பவர் மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்குமாறு கோரி பிரிட்டிஷாருக்கு வீர்சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதியதாக ராகுல்காந்தி கூறியதாகவும், இது தவறான தகவல் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.



இந்த புகாரின் அடிப்படையில் ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷாரால் சாவர்க்கர் 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், அவரது புகழுக்கு களங்கம் வகையில் தேர்தல் பேரணியில் பேசியதால் ராகுல்காந்தி மீது புகார் கொடுத்திருப்பதாகவும் ரண்ஜீத் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.




Next Story