Top
undefined
Begin typing your search above and press return to search.

தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? தி.மு.க-வின் போலி முகத்திரையை கிழித்த துணை சபாநாயகர் தம்பிதுரை

தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? தி.மு.க-வின் போலி முகத்திரையை கிழித்த துணை சபாநாயகர் தம்பிதுரை

SG SuryahBy : SG Suryah

  |  15 Nov 2018 7:52 PM GMT







அடுத்த வருடம் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டார். கிராமம் கிராமமாக சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார்.



அந்த வகையில் சமீபத்தில் மனு வாங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் தி.மு.க.வும்-காங்கிரசும் 15 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். ஏதாவது தமிழகத்திற்கு நன்மை கிடைத்ததா? இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது கூட மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இருந்து தி.மு.க. விலகவில்லை. இப்போது தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?



மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அந்த தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். ஒத்தக் கருத்துடையவர்களுடன்தான் தேர்தல் உடன்பாடு. எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டு வருபவர்களுடன் அ.தி.மு.க. தலைமை கூட்டணி அமைக்கும். சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் சந்திப்பு ஒரு நாடகம். இருவரும் தங்கள் நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக்கொள்வார்கள்.



தமிழர்களைக் காப்பாற்ற முடியாதவர்கள் நிறைந்த கட்சிதான் தி.மு.க. இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது தி.மு.க மத்திய ஆட்சியில் இருந்தது. தமிழர்களைக் காப்பாற்றாத தி.மு.க, இப்போது கம்யூனிஸ்ட்டுகளுடன் சேர்ந்து இந்தியாவை வலிமையாக்குவோம் என்று கூறுவது அரசியலுக்காக, தேர்தலுக்காக.. பிரசாரத்துக்காக மட்டுமே' என்று கூறியுள்ளார்.








Next Story