Top
undefined
Begin typing your search above and press return to search.

திருப்தி தேசாயை திருப்பி அனுப்பிய ஐயப்ப பக்தர்கள்! ஹிந்துக்கள் ஒற்றுமையின் வெற்றி?

திருப்தி தேசாயை திருப்பி அனுப்பிய ஐயப்ப பக்தர்கள்! ஹிந்துக்கள் ஒற்றுமையின் வெற்றி?

SG SuryahBy : SG Suryah

  |  16 Nov 2018 2:19 PM GMT

பூமாத்தா பிரிகேட் என்ற அமைப்பை நடத்தி வரும் பெண்ணியவாதி திருமதி திருப்தி தேசாய் அவர்கள், சபரிமலை சன்னதிக்கு செல்வதற்கு ஆறு பெண்களுடன் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவர் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்று ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொச்சி விமான நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவரை சபரிமலைக்கு அழைத்து செல்ல எந்த டாக்ஸி ஓட்டுனரும் முன் வரவில்லை. இதனால் அவர் விமான நிலையத்தில் உள்ளே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, இன்று இரவு 9.30 மணி விமானம் மூலம் அவர் திரும்பிச் செல்லத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். 12 மணி நேரமாக விமான நிலையம் அருகே போராட்டம் தொடர்ந்த நிலையில், திருப்தி தேசாய் இந்த முடிவை எடுத்துள்ளார். நெடுங்கேஷரி விமான நிலைய அதிகாரிகள் மாவட்ட கலெக்டருடன் கலந்துரையாடியுள்ளனர். ஆர்ப்பாட்டங்களால் விமான நிலையத்தின் அன்றாட செயல்பாடு பாதிக்கிறது என்று எடுத்துரைத்தனர். விமான நிலையத்தின் அன்றாட செயல்பாட்டை மீட்டெடுக்க அவசரமாக இந்த பிரச்சினையில் தலையீடு செய்ய கலெக்டரிடம் கேட்டுக் கொண்டனர். அதன் படி, தற்போது சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விளம்பரம் தேடிக்கொள்ள சபரிமலை செல்வேன் என்று புறப்பட்டு தோல்வி அடைந்த பெண்களின் பட்டியலில் மேலும் ஒருவர் இணைந்துள்ளார். மேலும் ஒருமுறை ஐயப்ப பக்தர்களின் பக்திக்கு வெற்றி கிடைத்துள்ளது.
Based on Inputs from Mathrubhoomi.
Next Story