Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜனநாயகம் பற்றி பேசும் காங்கிரஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தலைவர் பதவியை நேரு குடும்பத்தைச் சேராதவர்களுக்கு தர தயாரா ? : விலாசிய பிரதமர் மோடி

ஜனநாயகம் பற்றி பேசும் காங்கிரஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தலைவர் பதவியை நேரு குடும்பத்தைச் சேராதவர்களுக்கு தர தயாரா ? : விலாசிய பிரதமர் மோடி

SG SuryahBy : SG Suryah

  |  17 Nov 2018 11:02 AM GMT

230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ஆம் தேர்தல் நடைபெறுகிறது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோர் இம்மாநிலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில் நேற்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகின்றனர்.
பிரதமர் மோடி நேற்று தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். குவாலியர் மாவட்டத்தின் அம்பிகாபூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார். அப்போது,
காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு அமைப்பு என்றார். பா.ஜ.க-வில் ஜனநாயகம் உள்ளதால் தான் டீ விற்றவரின் மகன் பிரதமராக வர முடிந்தது என்று அவர் கூறினார். ஜனநாயகம் பற்றி பேசும் காங்கிரஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தலைவர் பதவியை நேரு குடும்பத்தைச் சேராதவர்களுக்கு தர தயாரா என அவர் கேள்வி எழுப்பினார்.
பா.ஜ.க. உருவாக்கிய சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது என்ற அவர், காங்கிரஸ் உருவாக்கிய தெலுங்கானா மாநிலத்தில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர் என்றார்.
Inputs from Maalaimalar and Polimer
Next Story