Top
undefined
Begin typing your search above and press return to search.

13 வருடமாக ஏன் இதை சொல்லவில்லை ? 13 வருடம் கழித்து சொன்னதற்கே இந்த கதி : ஒடுக்கப்படும் பெண் சமுதாயம்

13 வருடமாக ஏன் இதை சொல்லவில்லை ? 13 வருடம் கழித்து சொன்னதற்கே இந்த கதி : ஒடுக்கப்படும் பெண் சமுதாயம்

SG SuryahBy : SG Suryah

  |  17 Nov 2018 7:19 PM GMT

காமப்பேரரசு வைரமுத்து பற்றிய உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பாடகி சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து அநியாயமாக நீக்கப்பட்டுள்ளார்.
பாடகி சின்மயியை முன் அறிவிப்பு ஏதுமின்றி டப்பிங் யூனியனலிருந்து நீக்கியுள்ளதாக, அவர் பதிவிட்டுள்ளார். இது குறித்து பாடகி சின்மயி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டப்பிங் யூனியனிலிருந்து என்னை நீக்கிவிட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இனிமேல் தமிழ் படங்களில் என்னால் டப் செய்ய முடியாது. இதற்கான  காரணமாக, நான் 2 ஆண்டுகளுக்கு ‘சந்தா கட்டணம்’ செலுத்தவில்லை என்று கூறியுள்ளனர். எனினும் எனது டப்பிங் வருவாயில் இருந்து 10% பணத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் இல்லை. தமிழ் திரைப்பட தொழில்துறையின் விதிகள் படி, டப்பிங் தொழிற்சங்கத்தின் உறுப்பினராக இல்லாவிட்டால், வேலை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். எந்தவொரு எழுத்துத் தகவலும் இல்லாமல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. தமிழில் மீண்டும் ஒரு படத்துக்கு என்னால் டப்பிங் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.
முதலில் டப்பிங் தொழிற் சங்கத்திலிருந்து வெளியேற்றப்படுவேன் என்று நான் எதிர்பார்த்தேன். எனக்கு மீண்டும் எனது உறுப்பினர் அட்டை திரும்ப வருமா என்று தெரியாது. எனக்கு தெரியப்படுத்தாமலேயே எனது  உறுப்பினர் பதவியை நீக்கியுள்ளனர். நான் இன்னும் அமெரிக்காவில் பிரபலமான கச்சேரி சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். தமிழ் மொழியில் கடைசி படமாக 96 தான் இருக்கும் என தோன்றுகிறது”, என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து, மேலும் பதிவிட்ட பாடகி சின்மயி, "13 வருடமாக ஏன் இது பற்றி பேசவில்லை என்று கேள்வி கேட்பவர்களுக்கு சொல்கிறேன், 13 வருடம் கழித்து பேசியதற்கே இந்த கதி. அப்படியே இந்த சமுதாயம் எனக்காக உதிவிருக்குமா அப்போது.", என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/Chinmayi/status/1063821669549121543?s=19
வைரமுத்து போல் திராவிட அரசியல் அதிகாரம் படைத்தவர்கள், பாலியல் குற்றங்கள் புரிந்துவிட்டு, நீதி கேட்கும் பெண்களை அதிகார பலத்தை வைத்து ஒடுக்க நினைப்பது இந்த திராவிட அரசியலின் கொடூர முகத்தை காட்டியுள்ளது. பெண்ணுரிமை பேசும் யாரும் சின்மயிக்காக குரல் கொடுக்காமல் இருப்பது அவர்களின் போலி பெண்ணுரிமையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
Next Story