Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆயுஷ்மான் மருத்துவ திட்டத்தின் பயனாளிகளில் தமிழ் நாடு 2-ம் இடம்! 68% பயனாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை!

ஆயுஷ்மான் மருத்துவ திட்டத்தின் பயனாளிகளில் தமிழ் நாடு 2-ம் இடம்! 68% பயனாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை!

SG SuryahBy : SG Suryah

  |  19 Nov 2018 10:26 AM GMT

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் நலத் திட்டத்தின் கீழ் பயனாளிகளில் 68 விழுக்காட்டினர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.


#மோடிகேர்(#ModiCare) எனப்படும் ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் மோடி இந்தியர்களுக்கு அர்பணித்தார். சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் வரையில், மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும். இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகள், அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பணமில்லாமல் சிகிச்சை எடுத்து கொள்ளலாம். இதில் இதய சிகிச்சை, கண் சிகிச்சை, பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, மூட்டு மாற்று சிகிச்சை, புற்றுநோய் உள்ளிட்ட பல முக்கிய நோய்களுக்கான சிகிச்சைகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பல பிரபல தனியார் மருத்துவமனைகளில் லட்சங்களில் வசூலிக்கப்படும் இதயத்தில் அடைப்பு நீக்கும் கருவி பொருத்துவதற்கான ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாயும், பைபாஸ் சிகிச்சைக்கு 90 ஆயிரம் ரூபாயும் கட்டண விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதய வால்வு மாற்று சிகிச்சைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், நுரையீரல் சிகிச்சைக்கு 45 ஆயிரம் ரூபாயும் மோடி கேர் திட்டத்தின் கீழ் கட்டண விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 90 ஆயிரம் ரூபாயும், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு 80 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்ப்பப்பை அகற்றுதலுக்கு 20 ஆயிரமும், குடலிறக்கத்துக்கு 15 ஆயிரமும், மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு 9 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விகிதங்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், அவர்களைச் சார்ந்தவர்களுக்கான மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 15 முதல் 20 சதவீதம் குறைவாகும்.உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாகக் கருதப்படும் இதை பிரதமர் மோடி ஆகஸ்ட்டில் தொடங்கிவைத்தார்


இதனையடுத்து பிரதமர் மக்கள்நலத் திட்டம் என்னும் பெயரில் ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செப்டம்பர் 23-ஆம் நாள் தொடங்கியது. இந்தத் திட்டத்தால் இரண்டு மாதக் காலத்துக்குள் 2 லட்சத்து 32ஆயிரத்து 592 பேர் பயனடைந்துள்ளதாகத் தேசிய நலவாழ்வு முகமையின் புள்ளி விவரத்தில் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 68 விழுக்காட்டினர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அந்தப் புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது. குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலானோர் பயனடைந்துள்ளனர்.

Next Story