Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரள தேவாலய வழக்கு தீர்ப்பை அமல்படுத்த உச்ச நீதிமன்றத்திடம் அவகாசம் கேட்கும் கேரள பினராய் அரசு, சபரிமலையில் காட்டிய வீம்பை காட்ட விடாமல் தடுக்கும் கேடுகெட்ட சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல்?

கேரள தேவாலய வழக்கு தீர்ப்பை அமல்படுத்த உச்ச நீதிமன்றத்திடம் அவகாசம் கேட்கும் கேரள பினராய் அரசு, சபரிமலையில் காட்டிய வீம்பை காட்ட விடாமல் தடுக்கும் கேடுகெட்ட சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல்?

SG SuryahBy : SG Suryah

  |  19 Nov 2018 4:04 PM GMT

கேரளாவில் மலங்கரா ஆர்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும், ஜாகபைட் சிரியன் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சர்ச்சை தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சுக்குள் யாரை அனுமதிப்பது என்பது குறித்து ஆர்தடாக்ஸ் சர்ச்சுக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.
ஆனால் இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்னும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை கேரள அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், இந்த "சிக்கலான" பிரச்சனையை மேற்கோள் காட்டி, உச்ச நீதிமன்றம், மலங்கார ஆர்த்தடாக்ஸ் சிரிய தேவாலய வழக்கு தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான நேர கட்டளைகளை வழங்கக்கூடாது என்று கோரியுள்ளது.
https://twitter.com/CNNnews18/status/1064455604704489472
மாநில அரசு அது இணக்கமான தீர்மானங்களை ஆராய்கிறது என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. ஹிந்துக்கள் தொடர்பான சபரிமலை விவகாரத்தை வீம்பு பிடித்து உடனடியாக அமல்படுத்தும் கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம், கிறுத்தவர்கள் சண்டையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனே அமல்படுத்தாமல் அவகாசம் கேட்பது இவர்களின் கேடுகெட்ட வாக்கு வங்கி அரசியலையும் சிறுபான்மை வாக்குக்காக மண்டியிடுவதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
Next Story