Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரளாவில் பா.ஜ.க தொண்டரின் தாய் மீது சிவப்பு வண்ணம் வீசி, வீட்டை சூறையாடிய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களின் வன்முறை வெறியாட்டம் !

கேரளாவில் பா.ஜ.க தொண்டரின் தாய் மீது சிவப்பு வண்ணம் வீசி, வீட்டை சூறையாடிய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களின் வன்முறை வெறியாட்டம் !

SG SuryahBy : SG Suryah

  |  20 Nov 2018 3:55 AM GMT

கேரளாவின் தளசேரி அருகில் 9 கம்யூனிஸ்ட் கட்சியின் குண்டர்கள், அப்பகுதியை தேர்ந்த பா.ஜ.க தொண்டரின் தாய் மீது சிவப்பு நிற வண்ணத்தை வீசி, அவரின் தங்க சங்கிலியை பறித்து அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களை கைது செய்து, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது கேரள காவல் துறை. மேலும் இவர்களிடம் பல கூர்மையான ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது.
பா.ஜ.க தொண்டரின் வீட்டையும் சூறையாடியுள்ளது இந்த கும்பல். தளசேரி காவல்துறையின் படி, கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் குழு, சரத் என அடையாளம் காணப்பட்ட பா.ஜ.க கட்சியினரின் வீட்டிற்குள் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது, அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்ற போது, ​​தொண்டரின் தாய் மீது சிவப்பு வண்ணம் வீசியுள்ளனர்.
இவர்கள் மீது 143 (சட்டவிரோதமாக கூடுவது), 147 (கலவரத்தில் ஈடுபடுதல்), 148 (கூர்மையான ஆயுதம் பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபடுவது) மற்றும் 447, 341, 323, 324 போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீது வன்முறை வெறியாட்டம் என்பது தொடர் கதை ஆகிவிட்டது. அரசு இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Next Story