Top
undefined
Begin typing your search above and press return to search.

இருமுடி கட்டி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கும் பொன்னார் : பக்தர்கள் மீதான அடக்குமுறை குறித்து உள்துறை அமைச்சரிடம் அறிக்கை சமர்பிப்பார்

இருமுடி கட்டி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கும் பொன்னார் : பக்தர்கள் மீதான அடக்குமுறை குறித்து உள்துறை அமைச்சரிடம் அறிக்கை சமர்பிப்பார்

SG SuryahBy : SG Suryah

  |  20 Nov 2018 6:14 PM GMT

இருமுடி கட்டி விரதம் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை சபரிமலைக்கு செல்ல விடாமல் விரட்டி அடிக்கிறது பினராயி தலைமயிலான கேரள அரசின் காவல்துறை. கேரள செய்தியான ஜனம் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், மும்பையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை சபரிமலை செல்ல விடாமல் கேரள காவல்துறை தடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வயதான பெண்கள், குழந்தைகள் உள்பட அனைத்து பக்தர்கள் மீதும் அடக்குமுறையை கையாண்டுள்ளது கேரள காவல்துறை.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, சரியான கழிப்பறை வசதி இன்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த வகையான அடக்குமுறைகளை கண்டித்து நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள் வீதிக்கு இறங்கி போராடி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், தலையில் இருமுடி சுமந்து சபரிமலை சென்று ஸ்வாமி ஐயப்பனை தரிசிக்க உள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/PonnaarrBJP/status/1064932296384368640?s=19
மேலும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மீது கேரள பினராயி அரசு தொடுக்கும் அடக்குமுறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
https://twitter.com/santhoshbjp/status/1064920106298265601?s=19
Next Story