Top
undefined
Begin typing your search above and press return to search.

நக்கீரன் கோபால் கைது வழக்கில் இந்து ராம் பேச அனுமதி அளித்தது ஏன்? மாஜிஸ்திரேட்டுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

நக்கீரன் கோபால் கைது வழக்கில் இந்து ராம் பேச அனுமதி அளித்தது ஏன்? மாஜிஸ்திரேட்டுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 Nov 2018 3:06 AM GMT

'நக்கீரன்' கோபால் கைது வழக்கில், எந்த சட்டத்தின் அடிப்படையில், நீதிமன்றத்தில் பேச, இந்து ராமுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து, அறிக்கை அளிக்கும்படி, எழும்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கவர்னர் குறித்து கட்டுரை வெளியிட்டது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார்.சென்னை, எழும்பூர், 13-வது மாஜிஸ்திரேட் கோபிநாத் முன், நக்கீரன் கோபால் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு மணி நேரம், விசாரணை நடந்தது.
விசாரணையின் போது, ஊடக பிரதிநிதியாக, இந்து ஆங்கில நாளிதழின் ஆசிரியர், ராம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, கோபால் மீது பதிவு செய்யப்பட்ட, இந்திய தண்டனை சட்டம், 124-வது பிரிவு பொருந்தாது என உத்தரவிட்டு, கோபால் விடுவிக்கப்பட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எழும்பூர், 13-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, வழக்குக்கு தொடர்பில்லாத நபரான, ராம் வைத்த வாதங்களை, நீதிபதி பதிவு செய்தார் என, அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
உடன் நீதிபதி, "மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில், மூன்றாவது நபர் வாதிடுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது" என்றார். பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றங்கள், சட்டங்களை மட்டும் பின்பற்ற வேண்டுமே தவிர, மக்களின் கருத்துக்களை தெரிவிக்கும் தளமாக மாறக் கூடாது. ராமின் செயல், சினிமாத்தனமாக இருக்கிறது. எதிர்காலத்தில், இதுபோன்ற செயல் ஏதும் நடக்கக் கூடாது என்று கடிந்துக் கொண்டார்.
அதனால், ராமை பேச அனுமதித்தது ஏன்? எந்த சட்டத்தின் அடிப்படையில் பேச அனுமதித்தார்? என்பது குறித்து, 28-ஆம் தேதிக்குள், 13வது மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, 29-ஆம் தேதிக்கு, வழக்கை ஒத்திவைத்தார்.
Next Story