Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலை ஐயப்பன் முன்பு கண்ணீர் விட்டு அழுத மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

சபரிமலை ஐயப்பன் முன்பு கண்ணீர் விட்டு அழுத மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 Nov 2018 3:03 PM GMT

சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்துக்கு செல்லும் பக்தர்களை சித்ரவதை செய்கிறது கேரள பினராயி அரசின் காவல்துறை. மலாயாள செய்தி தொலைக்காட்சியான ஜனம் டி.வி. ஐயப்ப பக்தர்கள் மீது கேரள காவல்துறை தொடுக்கும் அடாவடி தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தமிழக பக்தர் ஒருவர் ஜனம் தொலைகாட்சியிடம் பேசுகையில், கேரள காவல்துறையினர் ஐயப்ப பக்தர்களை மலை மேலே செல்ல விடாமல் தடுத்து கீழே செல்ல சொல்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். தான் 15 வருடமாக சபரிமலைக்கு வருவதாகவும் இதை போல் ஒரு வருடம் கூட பக்தர்களுக்கு தொந்தரவு வந்ததில்லை என்றும் கூறியுள்ளார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலை தரிசனத்திற்காக நீலக்கல்லை அடைந்தார். அமைச்சரின் வாகனத்தை மட்டுமே அனுமதிக்க முடியும், மற்றவர்கள் பம்பையை கேரள அரசு பேருந்துகள் மூலம் அடையலாம் என கேரள காவல்துறையால் கூறப்பட்டது. ஆனால், மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் மற்றும் பிற பா.ஜ.க தலைவர்கள் இதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு தேவையற்ற முறையில் பக்தர்களை தொந்தரவு செய்வதாக அமைச்சர் கூறினார். கேரள பா.ஜ.க. தலைவர் ஏ.என்.ராதாகிருஷ்ணனும் அமைச்சருடன் உடன் இருந்தார். அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், சபரிமலை சென்று ஸ்வாமி ஐயப்பனை தரிசனம் செய்தார். தரிசனம் செய்யும் போது, பக்தர்களின் துயர நிலையை எண்ணி ஐயப்பன் முன்பு கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
https://twitter.com/PonnaarrBJP/status/1065217863667990528?s=19
Image Credits : Screenshot from Mathrubumi video
Next Story