Top
undefined
Begin typing your search above and press return to search.

"சரணம் ஐயப்பா" என்ற கோஷத்திற்கு தடை, 6 மணி நேரத்திற்கு மட்டுமே தரிசனம் ! அராஜகத்தின் உச்சத்தில் கேரள பினராய் அரசாங்கம்!

சரணம் ஐயப்பா என்ற கோஷத்திற்கு தடை, 6 மணி நேரத்திற்கு மட்டுமே தரிசனம் ! அராஜகத்தின் உச்சத்தில் கேரள பினராய் அரசாங்கம்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 Nov 2018 3:52 AM GMT

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது தலையாய கடமை என்று ஆளும் இடதுசாரி அரசு தெரிவித்தது. இதற்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்து பல போராட்டங்களில் ஈடுபட்டது. இதை தொடர்ந்து கேரளா முழுவதும் மக்கள் மாபெரும் எழுச்சி போராட்டங்களை நடத்தியது.
அக்டோபர் 17-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. பெண்கள் கோயிலுக்குள் செல்லுவதை தடுக்க நீலக்கல் என்ற இடத்தில் தடுப்புகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து 144 தடை விதிக்கப்பட்டது. நவம்பர் 5-ஆம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. போராட்டங்களில் ஈடுபட்ட 3000-க்கும் மேற்பட்டோர் கைதி செய்யப்பட்டனர். 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாளுக்கு நாள் சபரிமலையில் போலீசாரின் கிடுக்குபிடி அதிகரித்து கொண்டே இருக்கிறது. பக்தர்கள் "சரணம் ஐயப்பா" என்ற கோஷத்தை முழங்க தடை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 6 மணி நேரத்திற்குள் ஸ்வாமி தரிசனத்தை முடித்து விட வேண்டும் என்றும் கட்டளை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் துண்டு பிரசுரங்களை பக்தர்களிடம் அளித்தனர் அதில்
1) பக்தர்கள் கோயில் வளாகத்தில் குழுக்களாக நிற்கவோ, அமரவோ கூடாது
2) ஐயப்ப சரண கோஷங்களை எழுப்ப கூடாது
3) செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது
4) 6 மணி நேரத்திற்கு மேல் கோவில் வளாகத்தில் இருக்க கூடாது
https://twitter.com/surnell/status/1064845486090321920?s=20
இவற்றை பின்பற்றாவிட்டால், சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதனால் சபரிமலை பக்தர்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
Next Story