Top
undefined
Begin typing your search above and press return to search.

ஊரை அடித்து உலையில் போடும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வைத்த செக்!

ஊரை அடித்து உலையில் போடும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வைத்த செக்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  25 Nov 2018 12:26 AM GMT

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 படி, எந்த ஒரு விற்பனையும் முறையற்ற வகையிலோ நுகர்வோருக்கு திருப்தி அளிக்காத வகையிலோ இருப்பின் அதற்குக் கட்டணம் விதிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளது. சேவைக் கட்டணம் என்பது, வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் சேவை திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் வசூலிக்கப்பட வேண்டியதாகும். இதை அளிப்பது குறித்து நுகர்வோர் தீர்மானிக்கலாம் பொதுவாக உணவகங்களில் சாப்பிடும் உணவுக்கு, அங்கு வழங்கப்படும் சேவைக்கென சேவைக் கட்டணத்தையும் சேர்த்து பில்லாக அளிக்கப்படும். சேவைக் கட்டணமானது 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உள்ளது. இது தவிர டிப்ஸ் எனப்படும் சப்ளையருக்கு அளிக்கப்படும் தொகை இதில் இடம் பெறாது. சேவைக் கட்டணத்தை கட்டாயமாக நுகர்வோரிடமிருந்து வசூலிப்பது முறையற்ற வர்த்தக நடவடிக்கையாகும்.


இந்த நிலையில், உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலித்துவிட்டு, அதை உணவக ஊழியர்களுக்கு வழங்கவில்லை எனில் வருமான வரி செலுத்த வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது. ஹோட்டல்களும், உணவகங்களும் சேவைக் கட்டணம் வசூலித்தால் அது வருமானத்தில் காட்டப்பட வேண்டும். அப்படி வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் உணவக ஊழியர்களுக்கும் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இந்நிலையில், இதுகுறித்து நுகர்வோரிடமிருந்து புகார்கள் வருவதாக, நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



உணவகங்கள் வசூலிக்கும் சேவைக் கட்டணம் ஊழியர்களுக்கும் பணியாளர்களுக்கும் வழங்கப்படாமல் இருக்கவே வாய்ப்பு அதிகம் என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது. இதை அடுத்து, சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என அனைத்து உணவகங்களிலும் ஆய்வு செய்யுமாறு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
Next Story