Top
undefined
Begin typing your search above and press return to search.

"தேசிய பேரிடர் என்பதே சட்டத்தில் இல்லை" - போலி தகவல்களை தமிழகத்தில் பரப்பும் அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் விளாசி தள்ளும் வானதி சீனிவாசன்!

தேசிய பேரிடர் என்பதே சட்டத்தில் இல்லை - போலி தகவல்களை தமிழகத்தில் பரப்பும் அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் விளாசி தள்ளும் வானதி சீனிவாசன்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  25 Nov 2018 1:50 PM GMT

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடர் பாதிப்பாக மத்திய அரசு அறிவிக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். இதையடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவோம் என மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரையும் பேட்டி அளித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் புயல் பாதிப்பை தேசிய பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை கொடுத்து முறையீட்டார். அதில், புயலால் பலியானோர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் எனவும் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
ஆக, தேசிய பேரிடர் என்றால் என்ன? அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தேசிய பேரிடர் என்று எதை குறிக்கின்றனர்? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் "சட்டத்தில் இல்லாத வகையில், கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென சில அரசியல் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்" என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது "புயலால் பாதிக்கப்பட்டு, மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வரும் சூழலில், சிலர் இதை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது. தேசிய பேரிடராக இதை அறிவிக்க வேண்டுமென சில கட்சிகள் வலியுறுத்துகின்றன. தேசிய பேரிடர் என்பதே சட்டத்தில் இல்லை. கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர், தேசிய பேரிடர் என்பது சட்டத்தில் இல்லாத ஒன்று எனத் தெளிவாக விளக்கினார். சட்டத்தில் இல்லாத ஒன்றை வலியுறுத்துவது சரியல்ல" என்று கூறினார்.
2005-ஆம் ஆண்டு தேசிய மேலாண்மை சட்டம் அமலுக்கு வந்த பின்பு, நிர்வாக ரீதியாக எந்த பகுதியையும், தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறுகையில், "புயல் வருவதற்கு முன்னரே கடலோரக் காவல் படையினர் 73 கப்பல்கள் மூலம் சென்று, மீனவர்களை எச்சரித்து கரைக்குத் திருப்பி அனுப்பினர். புயல் சேதாரம் தொடர்பாக தமிழக அரசு இடைக்கால அறிக்கை சமர்ப்பித்த பிறகு, மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும். மத்திய அரசும், பா.ஜ.க-வும் எப்போதும் தமிழக மக்களுக்கு உதவத் தயாராக உள்ளன. தமிழக அரசும் இயன்றவரை நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

Next Story