Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கருவறுக்கப்படும் தீவிரவாதம் - பிரதமரின் முயற்சிக்கு கை மேல் கிடைத்த பலன்!

இந்தியாவில் கருவறுக்கப்படும் தீவிரவாதம் - பிரதமரின் முயற்சிக்கு கை மேல் கிடைத்த பலன்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  26 Nov 2018 11:32 AM GMT

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி கடல் வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். 29-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான். உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.



இது தொடர்பாக கடந்த இருவாரங்களுக்கு முன் பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றிருந்த போது, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை சந்தித்து இது தொடர்பாகப் பேசினார். அப்போது விரைவில் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தப் பேச்சின் முடிவில் அமெரிக்கா இந்த வெகுமதியை அறிவித்துள்ளது.
Next Story