Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரள ஹிந்துக்களுக்காக நடத்திய பா.ஜ.க போராட்டம் வெற்றி: ஹிந்து தேவசம் போர்டுக்கு ஒரு ஹிந்துதான் ஆணையராக இருக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரள ஹிந்துக்களுக்காக நடத்திய பா.ஜ.க போராட்டம் வெற்றி: ஹிந்து தேவசம் போர்டுக்கு ஒரு ஹிந்துதான் ஆணையராக இருக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Nov 2018 10:17 AM GMT

கேரளாவில் உள்ள ஹிந்து கோவில்களை நிர்வகிக்கும் தேவசம் போர்டு ஆணையராக இந்து அல்லாதவரை நியமிக்கும் வகையில் அங்குள்ள கம்யூனிஸ்ட் அரசு சட்டத்திருத்தம் செய்தது. இதனால் கேரள இந்துக்கள் கடும் அதிருப்தியடைந்த நிலையில் கேரள பா.ஜ.க இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் மீதான தீர்ப்பில் ஹிந்து தேவசம் போர்டுக்கு ஒரு ஹிந்துதான் ஆணையராக இருக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இந்து கோவில்களை நிர்வகிக்க மாநில அரசு அறங்காவல் துறையை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறது. ஆனால் கேரளாவில் உள்ள 3,000 ஹிந்து கோவில்களை நிர்வகிக்க குருவாயூர், திருவிதாங்கூர், மலபார், கொச்சி, கூடல் மாணிக்கம் என ஐந்து தேவசம் போர்டுகள் செயல்பட்டு வருகின்றன. ஹிந்து தேவசம் வாரியங்கள் சட்டப்படி ஒவ்வொரு தேவசம் போர்டுக்கும் ஆணையராக ஹிந்து ஒருவரைத்தான் நியமிக்க முடியும். ஆனால் கேரளாவில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை கொஞ்சம் கூடுதலாக இருப்பதால் அவர்களின் வாக்கு வங்கிக்கு பயந்து கிடக்கும் கம்யூனிஸ்டு அரசு அவர்களை திருப்தி படுத்தவும், ஹிந்து கோவில்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் மற்றும் நிலங்களை கிறிஸ்தவர்கள் அனுபவிக்க வழி ஏற்படுத்தும் விதத்தில் திருவிதாங்கூர் - கொச்சி இந்து மத நிலையங்கள் சட்டம் - 1950-ல் ஒரு திருத்தம் ஒன்றை சமீபத்தில் கொண்டு வந்தது.
அதன்படி, திருவிதாங்கூர் போர்டுகளின் கமிஷனராக, ஹிந்து அல்லாதவரையும் நியமிக்க முடியும். கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்டுகள் ஹிந்துக்களின் தனியுரியுரிமையை பறிக்கும் இந்த கொடூர சட்டத்தை கொண்டு வந்த போதிலும், இந்த அநியாயத்தை எதிர்த்து எதிர் கட்சியாக உள்ள காங்கிரஸ் குரல் கொடுக்கவில்லை. காங்கிரசாரும் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கிக்கு பயந்து அடங்கி ஒடுங்கிக் கிடந்தனர். இதனால் கேரள மாநில ஹிந்துக்கள் ஆத்திரமுற்றனர். அங்குள்ள ஹிந்துக்களுக்கு ஆதரவாக இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை உள்ளிட்ட பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ராமசந்திர மேனன், தேவன் ராமசந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், இரண்டு தேவசம் போர்டுகளின் கமிஷனர் என்பவர் ஹிந்து மதத்தை பின்பற்றுபவராக மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு  கேரள ஹிந்துக்களுக்கு தங்கள் உரிமையை மீட்டுக் கொடுத்துதுடன், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. தங்களுக்காக சட்டப் போராட்டம் நடத்திய பா.ஜ.க-வுக்காக கேரள ஹிந்துக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story