Top
undefined
Begin typing your search above and press return to search.

மலேசியா மாரியம்மன் கோவிலில் தமிழர்கள் மீது கொலை வெறி தாக்குதல் : இஸ்லாமிய இனவாதம் தான் காரணமா ?

மலேசியா மாரியம்மன் கோவிலில் தமிழர்கள் மீது கொலை வெறி தாக்குதல் : இஸ்லாமிய இனவாதம் தான் காரணமா ?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Nov 2018 6:04 PM GMT

மலேசியா நாட்டில் உள்ள செலங்கோர் மாநிலத்தில், சுபாங் ஜெயா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 26 ஆம் தேதி காலை 2.45 மணி அளவில் கோவிலில், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை நோக்கி கடுமையான கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டது. கோவிலில் இருந்த  பொருட்களையும் சேதப்படுத்தியது. அங்கிருந்த கோவில் நிர்வாகிகள், பூசாரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த கார்களும் சேதப்படுத்தப்பட்டது. 10க்கும் மேற்பட்ட கார்கள் அடித்துக் நெறுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடம் மீதுள்ள பிரச்சனை என்று கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, காவல்துறை நேர்மையாக செயல்படுவதிலிருந்து தவறுகிறது எனவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனையடுத்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் உரையாடிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில், இஸ்லாமியர்கள் தான் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
https://twitter.com/PannirRaghavan/status/1067087771997659136?s=19
ஆனால் இந்த குற்றச்சாட்டை காவல்துறை மறுத்துள்ளது. இந்த தாக்குதல் இனவாத தாக்குதல் இல்லை என்று கூறியுள்ளது. பிரதமர் அலுவலக அமைச்சர் பி வேத மூர்த்தி பேசுகையில், கோவில் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே வணிக வளாகம் ஒன்றில் அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


கோவில் மீதான தாக்குதல் மற்றும் வணிக வளாகம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரையில் 21 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இனவாத தாக்குதல் இல்லை என்றால் எதற்காக கோவில் மீதும் பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று கேள்வி தமிழர்களிடையே எழுந்துள்ளது.


Source : Channel News Asia, Dailythanthi
Next Story