Top
undefined
Begin typing your search above and press return to search.

நான் கவுல் பிராமணன்: ராகுல் காந்தி அறிவிப்பு! முன்னோர்களின் பெயரை கூட எழுதி வைத்து படித்த அவலம்!!

நான் கவுல் பிராமணன்: ராகுல் காந்தி அறிவிப்பு! முன்னோர்களின் பெயரை கூட எழுதி வைத்து படித்த அவலம்!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Nov 2018 9:34 AM GMT








தேர்தல் நெருங்க நெருங்க தினம் ஒரு வேடம் அணிந்து வந்த ராகுல் காந்தி இறுதியாக நான் கவுல் பிராமணன் என்று அறிவித்திருக்கிறார்.
இந்துத்வாவை கடைபிடிப்பது போல் வேடம் அணியும் ராகுல்
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் முதல், ராகுல் பல்வேறு மாநிலங்களில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார். தற்போது ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்திலும் அவரது கோவில் தரிசனம் தொடர்கிறது. இந்துக்களின் ஓட்டுக்களை பெற காங்கிரசும், ராகுலும் மென்மையான இந்துத்வாவை கடைப்பிடிக்கின்றனர் என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த, மாதம் மத்திய பிரதேசம்  மாநிலம், உஜ்ஜைனியில் புகழ் பெற்ற மகாகாலேஸ்வர் கோவிலில் ராகுல் தரிசனம் செய்தார். அப்போது பா.ஜ.க  செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா, "ராகுல் பூணூல் அணிந்து இருக்கிறரா? அது எந்த பிரிவை சேர்ந்த பூணூல்? அவரது கோத்திரம் என்ன?" என, கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு காங்கிரசும், ராகுலும் பதில் கூறாமல் மவுனம் சாதித்து வந்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று முதல் பிரச்சாரம் மேற்கொண்டார் ராகுல் காந்தி. முன்னதாக, புஸ்கர் என்ற இடத்தில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்று அங்கு நடந்த பூஜையில் பங்கேற்றார். அப்போது அர்ச்சகர், ராகுலின் கோத்திரம் உள்ளிட்ட விவரங்களை கேட்டார். அதற்கு ராகுல், "நான் தத்தாத்ரேய கோத்திரத்தை சேர்ந்தவன்; கவுல் பிராமணன்" என, தெரிவித்தார். மேலும் கையில் வைத்திருந்த ஆவணங்களின் உதவியுடன் தனது முன்னோர்களின் பெயர்களையும் கூறினார்.






Next Story