Top
undefined
Begin typing your search above and press return to search.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு : மோடி சர்க்கார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு : மோடி சர்க்கார்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Nov 2018 6:17 PM GMT

ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் நிவாரண பொருட்களுக்கு டிச.,10-ம் தேதி வரையில் சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ரயில் மூலம் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.

நிவாரண பொருட்கள் சரக்கு ரயிலில் கொண்டு செல்ல கட்டண விலக்கு கோரி தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.


Inputs from Dinamalar
Next Story