Top
undefined
Begin typing your search above and press return to search.

665 வாக்குறுதிகளுள் 630 வாக்குறுதிகள் வெற்றிகரமாக நிறைவேற்றம் - பா.ஜ.க படைத்த சரித்திரம்.!

665 வாக்குறுதிகளுள் 630 வாக்குறுதிகள் வெற்றிகரமாக நிறைவேற்றம் - பா.ஜ.க படைத்த சரித்திரம்.!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  28 Nov 2018 11:08 AM GMT

முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் டிசம்பர் 7–ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அதிதீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் விவசாய கடன் தள்ளுபடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.


இந்நிலையில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பேசுகையில், கடந்த 2013 தேர்தலின் போது 665 வாக்குறுதிகளை கொடுத்ததாகவும் அதில் 630 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும் 95 சதவிதம் வெற்றிக்கரமானது எனவும் குறிப்பிட்டார். விவசாயத்திற்காக பல்வேறு நடவடிக்கையை அரசு முன்னெடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


ராஜஸ்தானில் தனியார்த்துறையில் வரும் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 30 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும் பா.ஜ.க அறிவித்துள்ள வாக்குறுதி முக்கியமானதாகியுள்ளது. அதாவது குறிப்பிட்ட விதிகள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 21 வயதுக்கு மேலுடைய இளைஞர்களுக்கு மாதம் ₹5 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story