Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐயப்ப பக்தர்களுக்கு கொடுத்த சிரமங்கள் ஏற்க முடியாதவை! கேரள போலீசாருக்கு செம டோஸ் விட்ட நீதிமன்றம்

ஐயப்ப பக்தர்களுக்கு கொடுத்த சிரமங்கள் ஏற்க முடியாதவை! கேரள போலீசாருக்கு செம டோஸ் விட்ட நீதிமன்றம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  28 Nov 2018 1:59 PM GMT

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்திய போலீஸாரை கண்டித்ததுடன், போலீசார் தன்னிச்சையாகப் பிறப்பித்த அனைத்து விதமான கெடுபிடிகளுக்கும் தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்பபக்தர்களும் இந்து அமைப்பினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலையில் பக்தர்களுக்கு போலீஸார் தேவையில்லாத கெடுபிடிகளை விதித்துள்ளதற்கு எதிராகவும், 144 தடை உத்தரவை நீக்கக்கோரியும் கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன்பின், பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் போலீஸார் பக்தர்களின் நிலையை உணராமல் தன்னிச்சையாக பிறப்பித்த பல்வேறு கெடுபிடிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதேசமயம், சபரிமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவுக்குத் தடையில்லை.
சபரிமலை சன்னிதானத்தில் எந்தவிதமான போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தக்கூடாது. போராட்டம் நடத்தும் இடம் கோயில் அல்ல. மேலும் பக்தர்கள் சரண கோஷம் எழுப்பவும் தடையில்லை. குழந்தைகளையும், பெண்களையும், மாற்றுத்திறனாளி பக்தர்களையும் இரவு நேரத்தில் சன்னிதானத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு போலீஸார் அளவுக்கு அதிகமான நெருக்கடிகளைத் தரக்கூடாது, தங்களின் அதிகாரத்தையும் காட்டக்கூடாது. ஒரு சில ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லையை மீறிச் செய்யும் செயல் ஒட்டுமொத்த போலீஸ் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடுகிறது. போலீஸார் மீது நம்பிக்கை இருக்கிறது, அவர்கள் தங்களின் நிலையை உணர்ந்து கடமையை சிறப்பாகச் செய்வார்கள் என்று நம்புகிறோம். நிலக்கல்லில் இருந்து சன்னிதானம் வரை அரசு பஸ்இரவு முழுவதும் சென்றுவரலாம். அதற்கு போலீஸார் விதித்திருந்த தடையும் நீக்கப்படுகிறது இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.
Next Story