Top
undefined
Begin typing your search above and press return to search.

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா - எதிர் கட்சிகளுக்கு மூக்குடைப்பு.!

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா - எதிர் கட்சிகளுக்கு மூக்குடைப்பு.!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  28 Nov 2018 2:05 PM GMT

அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்த பேட்டியில், "தற்போது சட்டசபை தேர்தல் நடக்கும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம். அங்கு ஆட்சியில் இருக்கும் எங்களுக்கு கடும் சவால் நிலவுவதாக சொல்வது தவறானது. ஆனால் நிலைமை அப்படியல்ல. தேர்தல் முடிவு டிசம்பர் 11-ம் தேதி வரும்போது 3 மாநிலத்திலும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றி இருப்போம். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு மேலும் உயர்ந்து வலுவாகும். மக்களின் அமோக ஆதரவுடன் 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார்.
ஒரு மாநிலத்தில் அரசு நடந்து கொண்டிருந்தால் ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும். ஆனால் எதிர்ப்பை மட்டும் பத்திரிகைகள் வெளிப்படுத்தி காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன. குஜராத் மாநிலத்திலேயே இதை பார்த்திருப்பீர்கள். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாங்கள் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறோம். ஏராளமான வளர்ச்சி திட்டங்களை அங்கு நிறைவேற்றி இருக்கிறோம். 129 நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. நாங்கள் செய்துள்ள வளர்ச்சி திட்டங்களே எங்களுக்கு மக்களிடம் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
அரசுக்கு எதிர்ப்பு இருப்பதாக இப்போது தான் சிலர் பேசுகிறார்கள். இதேபோலதான், குஜராத் தேர்தலிலும் சொன்னார்கள். ஆனால் அங்கு நாங்கள் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றோம். அதற்கு நாங்கள் செய்த திட்டங்கள் தான் காரணம். அதேபோல, இந்த மாநிலங்களிலும் எங்களுடைய திட்டங்கள் வெற்றியை தேடித்தரும். மாநில தேர்தல் முடிவின் தாக்கம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்று சொல்வது சரியான வாதம் அல்ல. மாநில தேர்தல் என்பது அங்குள்ள சூழ்நிலைகளை பொறுத்து, அங்குள்ள பிரச்சினைகளை மையமாக வைத்து நடப்பதாகும்.
எனவே அதன் தாக்கக்தை பாராளுமன்றத்தில் எதிர்பார்க்க முடியாது. எங்கள் கட்சியை பொறுத்தவரை கூட்டு அரசியல் முறையில் பணியாற்றி வருகிறோம். நாங்கள் செய்த திட்டங்கள், எதிர்கால பணிகள் மூலம் 2019 தேர்தலிலும் சிறப்பான வெற்றியை பெறுவோம். மக்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து பல மாநிலங்களிலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். உத்தர பிரதேசம், மராட்டியம், அரியானா என பல மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறோம். இப்போது நடக்கும் 5 மாநில தேர்தல்களும் எங்களுக்கு முக்கியமானது தான். இதிலும் சிறப்பான வெற்றி கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.
Next Story