Top
undefined
Begin typing your search above and press return to search.

இஸ்லாமிய மதத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ரெஹானா பாத்திமா கைது

இஸ்லாமிய மதத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ரெஹானா பாத்திமா கைது

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Nov 2018 6:37 PM GMT

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சுய விளம்பரம் தேடிக்கொள்ள கேரளாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் ரெஹானா பாத்திமா(29) அதிரடிப்படை சீருடை மற்றும் காவல்துறை ஹெல்மெட் அணிந்தும் செல்ல முயன்றார். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவரால் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. தொடர்ந்து, கேரள ஜமாஅத், அவரை இஸ்லாமிய மதத்திலிருந்து நீக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த அக்டோபேர் மாதம் 20ஆம் தேதி ரெஹானா பாத்திமா தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில், கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இது மத உணர்வுகளை காயப்படுத்துவதாக, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஐ.பி.சி 295 ஏ சட்டப்பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

அவர் முன்ஜாமின் கேட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், முன்ஜாமின் வழங்க மறுத்ததுடன், நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்று (நவ.,27) அவரை பத்தினம்திட்டா காவல்துறை கைது செய்தனர். விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

Inputs from Dinamalar
Next Story