Top
undefined
Begin typing your search above and press return to search.

ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் விரைவில் கைதா ?

ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் விரைவில் கைதா ?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  28 Nov 2018 3:19 AM GMT

ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம்  ₹280 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு இறுதி கட்டத்தை அடைந்தது . அப்பாவும் , மகனும் டிசம்பர் 18 ந் தேதிக்குப் பிறகு கைது செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏர்செல்-மாக்சிஸ் பங்குகள் பரிவர்த்தனை விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ₹280 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் இறுதி விசாரணையை தொடர சி.பி.ஐ. க்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து டிசம்பர் 18 ந் தேதிக்குப் பிறகு தகப்பன், மகன் இருவரும் கைது செய்யப்படுவது உறுதி என்று கூறப்படுகிறது.

முன்னாள் காங்கிரஸ் நிதி அமைச்சர் பி.சிதம்பரம் பதவியில் இருக்கும் போது ஏர்செல்-மாக்ஸிஸ் ஒப்பந்தத்திற்கு சட்டவிரோத அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.  இந்த விவகாரத்தில் அவரது மகன் கார்த்திக்கும் அவரும்  லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும்  சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீதும், அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.  சமீபத்தில் புது டெல்லியிலுள்ள என்டிடிவி நிறுவனம் வருவாய் துறைக்கு சமர்ப்பித்த கணக்குகளில் அந்த நிறுவனம் தனது வருவாய் குறித்த பல்வேறு தகவல்களை மறைத்து பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பான  விசாரணையில் பி.சிதம்பரம் பெற்ற லஞ்சப்பணத்தை இந்த தொலைகாட்சியின் கணக்கில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததாக வருவாய் வரி அதிகாரி சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா, என்.டி.டி.வி யின் நிதி முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

வருவாய் வரி அதிகாரி சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சி.பி.ஐ தலைமைக்கு எழுதிய ஒரு 88 பக்க கடிதத்தில், "ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களிடையிலான ஒப்பந்தம் தொடர்பாக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில்  ₹3,500 கோடிக்கு அனுமதி வழங்கியதற்காக பி.சிதமபரத்துக்கு ₹280 கோடி லஞ்சப் பணம் வழங்கப்பட்டதாகவும்,  அந்த பணத்தை  என்.டி.டி.வி லிமிடெட் நிறுவனத்தில் மாக்ஸிஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் டி. அனந்த கிருஷ்ணன் ஆகியோர் நிறுத்தி வைத்துள்ளதாகவும் இந்த விவகாரம் குறிப்பிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளால் மூடி மறைக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். "

இந்நிலையில், 'இந்த வழக்கு தொடர்பாக, சிதம்பரம் மற்றும் கார்த்தியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரிக்கலாம்' என, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, டில்லி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. எனினும், டிச., 18 வரை, இருவரையும் கைது செய்ய, கோர்ட் தடை விதித்துள்ளது. தடை வித்திருந்தாலும் விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாலும், குற்றச்சாட்டுகள் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதாலும்  இவர்கள் டிசம்பர் 18 ந் தேதிக்குப் பிறகு கைது செய்யப்படுவது உறுதி என கூறப்படுகிறது.
Next Story