Top
undefined
Begin typing your search above and press return to search.

இருமுடி கட்டி கன்னிசாமியாக சபரிமலைக்குச் செல்லும் அன்புமணி..!

இருமுடி கட்டி கன்னிசாமியாக சபரிமலைக்குச் செல்லும் அன்புமணி..!

SG SuryahBy : SG Suryah

  |  29 Nov 2018 2:31 AM GMT

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை போட்டிருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தவர், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இது தொடர்பாக அவர் அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “சபரிமலையில் நடக்கும் பாரம்பரிய விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. இது, எனது தனிப்பட்ட கருத்து. மாதவிடாய் காலங்களிலுள்ள 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் வரக்கூடாது என்ற ஐதீகம் உள்ளது. இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. நீதிமன்றம் எங்குத் தலையிடலாம் என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லப்படும்போது, அங்குத் தலையிடலாம். கிறிஸ்தவ மதத்தில் போப், பெண்ணாக இருக்க வேண்டும் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியுமா? முடியாது தானே” என காட்டமாக விமர்சித்திருந்தார்.



இந்த நிலையில் பரபரப்பாகக் காணப்படும் சபரிமலைக்கு கன்னிசாமியாக இருமுடி கட்டி பா.ம.க இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி இருமுடி கட்டி இன்று புறப்பட்டுச் சென்றார். மாலை அணிவித்து விரதங்களைக் கடைப்பிடித்த அன்புமணி, இருமுடி கட்டி கன்னிசாமியாக சபரிமலைக்குச் செல்கிறார். அவரின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் அவரின் குடும்பத்தினரும் கட்சியினரும் உள்ளனர்.


Next Story