Top
undefined
Begin typing your search above and press return to search.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு ஜி.எஸ்.டி வரி செலுத்த காலக்கெடு நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு ஜி.எஸ்.டி வரி செலுத்த காலக்கெடு நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு

SG SuryahBy : SG Suryah

  |  29 Nov 2018 1:30 PM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., செலுத்த காலக்கெடு டிசம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, தேனி , தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி, கரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும்பாதிக்கப்பட்டது. இதனையடுத்து இம்மாவட்டங்களில் ஜி.எஸ்.டி வரி செலுத்த காலக்கெடு டிசம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Next Story