Top
undefined
Begin typing your search above and press return to search.

நவீன வசதிகளுடன் நிழற் குடை சாலையாக மாறுகிறது மெரீனா, எலியட்ஸ் ஜாகிங் சாலை : ₹14.60 கோடி வழங்கும் மோடி சர்க்கார்

நவீன வசதிகளுடன் நிழற் குடை சாலையாக மாறுகிறது மெரீனா, எலியட்ஸ் ஜாகிங் சாலை : ₹14.60 கோடி வழங்கும் மோடி சர்க்கார்

SG SuryahBy : SG Suryah

  |  29 Nov 2018 10:57 AM GMT

மத்திய அரசின் 'ஸ்வதேஷ் தர்ஷன்' திட்டத்தின் கீழ் ₹14.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சென்னை மெரீனா, எலியட் ஜாகிங் சாலைகள் நவீன வசதிகளுடன் 20 குடை வடிவ நிழற் பந்தல்களைக் கொண்ட சாலைகளாக மாறுகின்றன. இங்கிருந்த படியே கடற்கரையை சொகுசாக உட்கார்ந்து ரசிக்கும் வகையில் நவீன இருக்கைகளும் அமைகின்றன.
மெரீனா கடற்கரையில் பொதுமக்கள் நடை பயிற்சி செய்யவும், ஜாகிங் செய்யவும், உடற்பயிற்சி செய்யவும் கடற்கரையை ஒட்டியவாறு நீளமான சாலை கலங்கரை விளக்கம் வரை அமைக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் தினமும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடுமையான வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் இந்த பாதையை பயன்படுத்த பலர் சிரமப்படுகின்றனர். எனவே மத்திய அரசின் நிதி உதவியில் இந்த சாலையில் 20 இடங்களில் குடைவடிவ நிழற் கூடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையின் ஓரத்தில் உட்கார்ந்த நிலையிலேயே கடலை கண்டு ரசிப்பதற்கான இருக்கை வசதிகளையும் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த இருக்கைகள் மூலம் மாற்றுத் திறனாளிகளும், மூத்த குடிமக்களும் பயன்பெற முடியும். மேலும் உடற்பயிற்சி செய்ய வருவோர் இந்த குடை பந்தல்களின் கீழ் அமர்ந்து ஓய்வெடுக்கவும் முடியும்.
இதே போன்ற திட்டம் எலியட்ஸ் கடற்கரையிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய மோடி சர்க்கார் 'ஸ்வதேஷ் தர்ஷன்' திட்டத்தின் கீழ் ₹14.60 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த சாலையின் மொத்த பரப்பளவு 24,191 சதுர மீட்டர்களாகும். சாலையின் ஓரங்களில் குடிநீர் கியோஸ்க்கள், முதலுதவி கியோஸ்க்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடலுக்கு அருகில் வசதியாக சிறப்பு சைக்கிள்கள் மூலம் செல்வதற்கான மணல் வழிப் பாதைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். இதே போன்ற பல திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மத்திய அரசு 'ஸ்வதேஷ் தர்ஷன்' திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ₹100 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் கூறினார். மேலும் கடற்கரைக்கு அருகே ஒரு புதிய பூங்காவை ₹19 கோடி செலவில் தமிழ்நாடு சுற்றுலா அபிவிருத்தி கார்ப்பரேஷன்(டி.டி.டி.சி) நிதியுதவி மூலம் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
Next Story