Top
undefined
Begin typing your search above and press return to search.

"பெண்கள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் அதிக அளவில் சேர வேண்டும்" - மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு!

பெண்கள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் அதிக அளவில் சேர வேண்டும் - மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு!

SG SuryahBy : SG Suryah

  |  29 Nov 2018 1:07 PM GMT

ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் கல்வி குழுமங்களில் ஒன்றான சாரதா வித்யாலயா பள்ளியின் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் முன்னேற்றப் பணிகளுக்காக சென்னை கிழக்கு ரோடேரியன் கிளப் ₹95 இலட்சம் நன்கொடை அளித்துள்ளது.
ரோட்டரி பவுண்டேஷன் மற்றும் அமெரிக்க சான் ஆண்டானியோ ரோட்டரி கிளப் உதவியுடன் இந்த நன்கொடை தொகையை சென்னை கிழக்கு ரோடேரியன் கிளப் வழங்கியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் மாவட்ட ரொட்டேரியன் கிளப் கவர்னர் பாபு பேரம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ₹95 இலட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
https://twitter.com/DefenceMinIndia/status/1068052789044092928?s=20
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரோட்டரி கிளப் மாவட்ட தலைவர் டாக்டர் நாராயணன் பேசுகையில் "பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களின் சக்தியை உணர்ந்து அவர்களை மேலும் முன்னேற்றும் விதமாக திட்டங்களை அமல் படுத்துகிறது. இந்த திட்டத்தால் ஈர்க்கப்பட்ட நாங்கள் மாணவிகளின் நலனுக்காக இந்த தொகையை நன்கொடையாக வழங்குவதாக குறிப்பிட்டார்.
இந்த தொகையைக் கொண்டு 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் லேப் அமைக்கப்பட உள்ளதாகவும், அனைத்து வகுப்பு மாணவர்களின் நாற்காலி மற்றும் மேசைகள் தேவைகளுக்காக இந்த தொகை பயன்படுத்தப்படும்" எனவும் கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணிவகள் மத்தியில் சிறப்புரை ஆற்றிய பாதுகாப்பு அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன், பெண்கள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் அதிக அளவில் சேர வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.
https://www.facebook.com/KathirNews/videos/2269522836615357/?__xts__[0]=68.ARA1oJqkl4fPvICpRtjvjZrBaVXenPu5mUKn0AfuS01Dm2NRmJD6-Jg8yzlN_uK6t1A9i5dO_214L3sLCh3uVKQBXmfgnoaQqW3P3RK6eeXBmvqWTvzlTVHh9rAZZU2s-Ifd6ZDv5JkqAIXR75oovQJZxf8ee2YnnEfCcHvu2aFzXu8gn00PST5HjF-tFT4aNNTB163RXtzwJSMpRC_aw3kMu6ejOZoO7GcKtk3PdC0ONGirjBr9BzHYD4OlLM6tiPLlSqyed1Th2Xc9CToqffCbUU5Jwl9f0reKFm-n-nybGaUdui9furVdJnrMw_Qq51y6SF96-iEKiPfXYmWCQ9Nihrb8hKvOru4&__tn__=-R
Next Story