Top
undefined
Begin typing your search above and press return to search.

தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரையில் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை - சுஷ்மா ஸ்வராஜ்

தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரையில் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை - சுஷ்மா ஸ்வராஜ்

SG SuryahBy : SG Suryah

  |  29 Nov 2018 2:36 AM GMT

பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்காது... தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரையில் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார்
சார்க் அமைப்பின் (South Asian Association for Regional Cooperation ) 8 உறுப்பு நாடுகள் இணைந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு ஒன்றினை நடத்தும். ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய எட்டு நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் ஆகும்.
இந்த வருடம் சார்க் மாநாடு பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இருக்கும் நாடுகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளது பாகிஸ்தான் அரசு. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அந்நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் முகம்மது
சார்க் உச்சி மாநாடு 2018  – இந்தியா பங்கேற்காதுபைசல் கூறியிருந்தார்.
இந்நிலையில், சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருக்கிறார். தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

Next Story