Top
undefined
Begin typing your search above and press return to search.

25 வயதிற்கு மேற்பட்ட பொதுப் பிரிவினரும் நீட் தேர்வு எழுத சலுகை - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

25 வயதிற்கு மேற்பட்ட பொதுப் பிரிவினரும் நீட் தேர்வு எழுத சலுகை - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

SG SuryahBy : SG Suryah

  |  29 Nov 2018 1:16 PM GMT

25 வயதிற்கு மேற்பட்ட பொதுப் பிரிவினரும் நீட் தேர்வு எழுதும் வகையில் சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற போதிலும் அரசு சலுகைகள் மற்றும் ஒதுக்கீட்டு சலுகைகளை அனைத்து இனத்திலுமுள்ள ஏழை மாணவர்கள் மற்றும் நலிந்த மக்களால் பெற முடியவில்லை. எனவே இந்த சலுகைகளை அனைத்து இனங்களிலுமுள்ள நலிந்த மக்கள் பெற வேண்டும் என்கிற கருத்து தற்போது இந்தியா முழுவதும் ஓங்கி ஒலித்து வருகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசும் இக்கருத்தை புரிந்து கொண்டு அதிக ஊதியம் பெறுபவர்கள் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி பதவி உயர்வு பெறுவதை கட்டுப்படுத்தும் வகையில் கிரீமிலேயர் முறையை அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறை தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறியுள்ளார். அதே சமயம் அனைத்து சாதிகளிலுமுள்ள பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மாணவர்கள் சலுகை பெறுவதிலும் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்பட்டோருக்கான வயதுச் சலுகை 30 வயது வரை உள்ளது. ஆனால் பொதுப்பிரிவில் உள்ள மாணவர்கள், குறிப்பாக அந்த பிரிவிலுள்ள நலிந்த மாணவர்களால் இந்த வயது சலுகையை பெற முடியவில்லை. இது குறித்த கோரிக்கைகள் மத்திய அரசுக்கு சென்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் பாதிக்கப்படும் மாணவர்களால் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துடன் பரிசீலனை செய்து இன்று ஒரு இடைக் கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் "25 வயதிற்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கான காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும். அத்துடன், வயது வரம்பு தளர்வு என்பது இறுதி தீர்ப்பை பொறுத்தே முடிவு செய்யப்படும் எனவும் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும் நீட் தேர்வு விண்ணப்பத்திற்கான கால கெடுவை ஒருவார காலம் நீட்டிக்க" மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவினர் 30 வயது வரை நீட்தேர்வு எழுதலாம் என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் தற்போது பொதுப்பிரிவினருக்கான வயதும் 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story