Top
undefined
Begin typing your search above and press return to search.

ஹிந்துக்களை திருப்திப் படுத்த மேற்கு வங்கத்தில் சூரிய பகவானுக்கு 10 கோயில்கள் : மம்தா பானர்ஜி முடிவு

ஹிந்துக்களை திருப்திப் படுத்த மேற்கு வங்கத்தில் சூரிய பகவானுக்கு 10 கோயில்கள் : மம்தா பானர்ஜி முடிவு

SG SuryahBy : SG Suryah

  |  29 Nov 2018 9:49 AM GMT





அகில இந்திய அளவில் காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க , மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சி  உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் ஹிந்துக்களிடையே சாதிப்பிரிவினையை தூண்டி அவர்களைத் தனித்தனியாக பிரித்து, சிறுபான்மை வாக்குகளை கணிசமான அளவில் கவர்ந்து வெற்றி பெறுவதையே தங்கள் நோக்கமாகவும், கொள்கையாகவும் வைத்துள்ளனர்.
இந்தநிலையில் இந்தியா முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாரதீய ஜனதா மற்றும் தோழமை கட்சிகள் ஆட்சி புரிந்து வருகின்றன. 35 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. இதற்கு காரணம் நாடெங்கிலுமுள்ள ஹிந்துக்கள் ஒன்றுபட்டு பாரதீய ஜனதா கட்சிக்கு அளித்துவரும் அதரவு தான். நாடு முழுவதும் ஹிந்துக்கள் இடையே ஏற்பட்டுவரும் ஒற்றுமை, அதனால் பா.ஜ.கவுக்கு பெருகிவரும் பலத்தை சகிக்கமுடியாத இந்த கட்சிகள் பா.ஜ.கவை மதவாத கட்சி என முத்திரை குத்துவது மட்டுமல்லாமல் போலி மதசார்பின்மையையும் பேசிவருகின்றன.
ஆனால் பா.ஜ.கவின் சுயநலமற்ற சேவை மனப்பான்மை, ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் முயற்சியைக் காணும் மக்கள்குறிப்பாக ஹிந்து மக்கள் ஆதரவு பா.ஜ.கவுக்கு நாடெங்கும் வளர்ந்து வருகிறது. எதிர் கட்சிகளின் கூட்டணி தந்திரத்தால் சில மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாமல் போனால் கூட அனைத்து இடங்களிலும் தனிப்பெரும் மக்கள் சக்தி வாய்ந்த கட்சியாக மாறி வருகிறது. குறிப்பாக மேற்கு வங்கம், ஒரிசா, கேரள மாநிலங்களில் ஆளும் கட்சிகள் பா.ஜ.கவின் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சியை கண்டு அலறிப்போயுள்ளன என்பதே உண்மை. எனவே முன்பு எப்போதும் ஹிந்துக்கள் நலனில் அக்கறை செலுத்தாத எதிர்கட்சித் தலைவர்கள் கூட தற்போது ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து நாடகம் ஆடி வருகின்றனர். குறிப்பாக ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது செல்லுமிடங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வருகிறார். இன்னும் ஒருபடி மேலே போய் தன்னை பிராம்மணர்களிலேயே உயர் பிரிவான கவுல் பிராமணன் என்று கூறிக் கொள்கிறார்.
சிறுபான்மை வாக்கு வங்கிகளுக்கு பயந்து இதுவரை கோவில் பக்கமேபோகாத மம்தாவுக்கு  கூட திடீரெனசூரியக்கடவுள் மீது பக்தி வந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சியை தடுக்க சூரிய பகவானுக்கு 10 கோயில்கள் கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் துர்காபூர், அஸன்சோல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஹிந்தி மொழிபேசும் ஹிந்துக்கள்  பகுதியில்சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில்காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மம்தா கட்சி அனைவரையும் தோற்கடித்து பா.ஜ.க வெற்றி பெற்றது. பா.ஜ.க பெற்று வரும் இந்த வெற்றியை  முறி அடிப்பதற்காகவே மம்தா கோவில்கள் கட்டும் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில்,22 தொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று பா.ஜ.க தீவிர பிரசாரம் செய்து வருகிறது.



Next Story