Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலையை காக்க தவறிய கேரள கம்யூனிஸ்ட் அரசு : 15 நாட்கள் கெடு விடுத்துள்ள குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த்

சபரிமலையை காக்க தவறிய கேரள கம்யூனிஸ்ட் அரசு : 15 நாட்கள் கெடு விடுத்துள்ள குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த்

SG SuryahBy : SG Suryah

  |  29 Nov 2018 8:18 PM GMT

15 நாட்களுக்குள் சபரிமலையில் உள்ள சூழல் மாற கெடு விடுத்துள்ளார் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த்.

குழந்தைகளுக்கு சபரிமலையில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக பல்வேறு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையிலும், மத்திய அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி சபரிமலையில் அதிரடி ஆய்வை நடத்தினார் ஆர். ஜி. ஆனந்த்.
கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் தனது பணிகளை சிறப்பாக செய்து வரும் மாவட்ட நிர்வாகத்தையும், காவல்துறையினரின் பணியையும் பாராட்டிய அவர், கேரள பினராயி அரசின் வரம்பு மீறிய நடவடிக்கைகளுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொண்டார்.
https://twitter.com/DrRGAnandOffice/status/1067840457273573377?s=20
நடத்தப்பட்ட ஆய்வு குறித்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் கதிரிடம் கூறுகையில், "சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு எந்த விதமான மருத்துவ வசதிகளும் செய்து தரப்படவில்லை. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் சுகாதாரத்தை பேணி காக்க கேரள அரசு தவறிவிட்டது. குழந்தைகள் நலன் மீது சற்றும் கவனம் செலுத்தப்படவில்லை. சபரிமலை செல்லும் குழந்தைகளுக்கு எந்த விதமான மருத்துவ வசதிகளும் செய்து தரப்படவில்லை. சபரிமலையை காக்க கேரள அரசு தவறிவிட்டது. சபரிமலை விவகாரங்களில் எந்த வித அரசியல் ரீதியான தலையீடும் இருக்க கூடாது. 15 நாட்களுக்குள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி ஆகியோர் உறுதி அளித்துள்ளனர். அவ்வாறு 15 நாட்களுக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட இல்லையென்றால் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்", என்று கூறினார்.
[video width="848" height="480" mp4="http://www.kathirnews.com/wp-content/uploads/2018/11/VID-20181129-WA0016.mp4"][/video]
மேலும் 144 தடை உத்தரவிற்குள் குழந்தைகளை கொண்டு வர கூடாது என்று ஆர். ஜி. ஆனந்த் வற்புறுத்தியுள்ளார்.
https://twitter.com/DrRGAnandBJP/status/1068396585661255680?s=20
Next Story