Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே விருதை பெறும் விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி

பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே விருதை பெறும் விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி

SG SuryahBy : SG Suryah

  |  29 Nov 2018 7:39 PM GMT

இந்தியாவில் தொடங்கப்பட்ட விப்ரோ தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் அசிம் பிரேம்ஜி. இதன் தலைமையகம் பெங்களூருவில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே விருது அசிம் பிரேம்ஜிக்கு வழங்கப்பட்டு உள்ளது.



அசிம் ஹசிம் பிரேம்ஜி குஜராத்தில் பிறந்தவர். ஒரு இந்தியப் பொறியியலாளரும் தொழில் முனைவோரும் ஆவார். இந்திய மென்பொருள் துறையின் சக்கரவர்த்தி என அறியப்படுகிறார். சுமார் நாற்பது ஆண்டுகளாக விப்ரோ நிறுவனத்தினை வழிநடத்தி உலகமென்பொருள் துறையின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக ஆனார். 2010 ஆம் ஆண்டில் ஆசியாவீக் எனும் இதழ் நடத்திய வாக்கெடுப்பில் உலகில் சக்திவாய்ந்த 20 மனிதர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் 2004 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் டைம் இதழ் நடத்திய வாக்கெடுப்பில் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராகத் தேர்வானார். பிரேம்ஜி , விப்ரோவின் 73 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அசிம் பிரேம்ஜி தொண்டு நிறுவனத்திற்கு 2.2 பில்லியன் வழங்கினார்.



இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் விருது வழங்க நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் ஜீக்லர் கூறும்பொழுது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைவதற்கு அசிம் பிரேம்ஜி சிறப்புடன் பங்காற்றியுள்ளார். அசிம் பிரேம்ஜி தொண்டு நிறுவனம் மற்றும் அசிம் பிரேம்ஜி பல்கலை கழகம் வழியே ஒரு கல்வியாளராக சமூகத்திற்கு சிறப்புமிக்க பணியை ஆற்றியுள்ளார் என கூறினார். பிரான்சில் உள்ள விப்ரோ நிறுவன ஊழியர்களில் 65 சதவீதத்தினர் உள்ளூர்வாசிகள் ஆவர். விப்ரோ நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாடு ஒரு முக்கிய சந்தையாக உள்ளது.  அந்நிறுவனம் தொடர்ந்து அங்கு முதலீடுகளை செய்து வருகிறது.

Next Story