Top
undefined
Begin typing your search above and press return to search.

மண்டை உடைந்தது.. ரத்தம் சொட்டியது.. தமிழகத்தில் கப்பலேறியது காங்கிரஸ் கட்சியின் மானம்.!

மண்டை உடைந்தது.. ரத்தம் சொட்டியது.. தமிழகத்தில் கப்பலேறியது காங்கிரஸ் கட்சியின் மானம்.!

SG SuryahBy : SG Suryah

  |  30 Nov 2018 10:56 AM GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் வீடுதோறும் காங்கிரஸ் என்னும் தலைப்பில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் ஆலோசனைக் கூட்டம் ,தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் முன்னிலையில் நடைபெற்றது . திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு, முதல் அவசர மாவட்ட செயற்குழு கூட்டமாக பல்லடத்தில் நடைபெற்றது.



விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்தும், அதற்காக வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்கள். கூட்டம் அமைதியாக நடைபெற்றுக்கொண்டு இருக்க, திடீரென ஒரு பிரிவினர் மட்டும் வடக்கு மாவட்டத் தலைவர் கோபி கட்சிக்கு நியாயமாக நடப்பதில்லை என்றும், ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார் என்றும் கூச்சலிடத் தொடங்கினார்கள். மேலும் கோபியின் செயல்பாடுகள் முற்றிலும் அதிருப்திகரமானதாக இருப்பதாகவும் இப்படியே சென்றால் திருப்பூரில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும் என்றும் சஞ்சய் தத்திடம் புகார் தெரிவித்தனர்.
அதன் பிறகு பல்லடம் பகுதியில் பொறுப்பாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைக்க, அவர்களை சஞ்சய் தத் அருகே செல்ல விடாமல் மற்றொரு தரப்பினர் தடுத்தனர். இதனால் இரு கோஷ்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாற்காலிகள் தூக்கியெறியப்பட்டன. மேடையிலிருந்து இந்தச் சம்பவத்தை எல்லாம் திகைப்புடன் பார்த்துக்கொண்டு இருந்த அகில இந்தியச் செயலாளர் சஞ்சய் தத் நிகழ்ச்சியை அத்துடன் முடித்துக்கொண்டு அரங்கத்திலிருந்து அவசரமாக வெளியேறினார். இருதரப்பினர் இடையேயான இந்த மோதலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஈஸ்வரன் என்பவரது மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்கள்.
காங்கிரஸின் தமிழக கோஷ்டி பூசல் ஓயா கதையாக வருடங்கள் கடந்தும் தொடர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Featured Image Credits - Vikatan.Com


Next Story