Top
undefined
Begin typing your search above and press return to search.

விவசாயிகளுக்கு தென்னை கன்றுகள், கூடுதல் மண்ணெண்ணெய், வீடு இழந்தவர்களுக்கு பிரதமர் திட்டத்தில் வீடுகள் உட்பட கேட்கும் உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு செய்து கொடுக்கும் - நிர்மலா சீத்தாராமன்

விவசாயிகளுக்கு தென்னை கன்றுகள், கூடுதல் மண்ணெண்ணெய், வீடு இழந்தவர்களுக்கு பிரதமர் திட்டத்தில் வீடுகள் உட்பட கேட்கும் உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு செய்து கொடுக்கும் - நிர்மலா சீத்தாராமன்

SG SuryahBy : SG Suryah

  |  30 Nov 2018 10:32 AM GMT

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
https://twitter.com/DefenceMinIndia/status/1068397986286354432?s=20
நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீத்தாராமன், புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மின் விநியோகம் சீராகும் வரை தேவைக்கும் அதிகமான மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசிடம் கேட்டிருப்பதாக அவர் கூறினார். தென்னை விவசாயிகளுக்கான கன்றுகள், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அந்தமான் தீவில் இருந்து ராணுவ கப்பல்கள் மூலமும் கொண்டு வர தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.
https://twitter.com/DDNewsLive/status/1068357883811717120?s=20
பல்வேறு நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்து புகழ்பெற்ற தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை இந்த நிலையில் பார்ப்பது வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், இருப்பினும் நம்பிக்கையை ஒரு போதும் கைவிட்டு விடக் கூடாது என்று தைரியமூட்டினார். இதை அடுத்து 800 பேருக்கு நிவாரணப் பொருட்களை நிர்மலா சீத்தாராமன் வழங்கினார். இதைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் சென்ற நிர்மலா சீத்தாராமன், துறவிக்காட்டில் சாய்ந்து கிடந்த தென்னை மரங்களை பார்வையிட்டார்.
https://twitter.com/DefenceMinIndia/status/1068358496457031681?s=20
பின்னர் பேராவூரணியில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், வாழைகள் சேதம் குறித்து விவசாயிகளே மதிப்பிட்டு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
Next Story