Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் சிலை கடத்தலுக்கு முற்றுப் புள்ளி வைத்த கறை படியாத காவலன், கம்பீரத்தின் சின்னம் என மக்களால் பாராட்டப்படும் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு

தமிழகத்தில் சிலை கடத்தலுக்கு முற்றுப் புள்ளி வைத்த கறை படியாத காவலன், கம்பீரத்தின் சின்னம் என மக்களால் பாராட்டப்படும் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு

SG SuryahBy : SG Suryah

  |  30 Nov 2018 6:28 AM GMT

இந்தியாவிலேயே திறமையான காவல்துறைக்கு பெயர் போன மாநிலமாக விளங்கியது தமிழகம்தான். இந்த துறைக்கு எத்தனையோ அதிகாரிகள் வந்து கொண்டும், போய் கொண்டும் இருந்தால் கூட ஒரு சில அதிகாரிகள் மட்டுமே காவல் துறைக்கு என்று இருக்கிற கம்பீரம் மற்றும் நேர்மையை நிலை நாட்டி செல்கிறார்கள். அவர்களில் மாணிக்கமாக விளங்குபவர் பொன் மாணிக்கவேல்.

பணம் என்னடா பணம்... பணம்.. குணம் தானடா நிரந்தரம்... என்ற பிரபல திரைப்பட பாடலின் பொருளுக்கு ஏற்ப தனது நேர்மை குணத்தை கடைசி வரை காப்பாற்றிக் கொண்டவர். தனக்கு வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளிலும் முத்திரையை பதித்த அவர் தனது பணியின் கடைசி 7 ஆண்டுகளில் செய்த சமர்த்தான பணி அனைவரின் பாராட்டையும் பெற்றது. கடந்த
2012-ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டார். அந்த நாள் முதல் இது வரை தமிழக கோயில்களில் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 201 உலோக சிலைகள், 653 கற்சிலைகள், 80 மரச்சிலைகள், 212 ஓவியங்கள் உள்பட 1,146 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 47 குற்றவாளிகளை பொன் மாணிக்கவேல் கைது செய்துள்ளார்.

மேலும் சர்வதேச சிலை கடத்தல் கும்பலோடு, இங்குள்ள திருட்டுக் கும்பல் வைத்திருந்த ரகசிய தொடர்பை உடைத்தெறிந்து, முற்றிலுமாக அந்தக் கும்பலை பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். ஓய்வுபெறும் பொன் மாணிக்கவேல் விட்டுச் செல்லும் பணியை, இனியொருவர் செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல என்று அவருடன் பணியாற்றிய போலீசார் பலர் தெரிவித்தனர். அத்தனை கடவுள்களின் ஆசிர்வாதத்தோடு பணியிலிருந்து ஓய்வு பெறும் அவருக்கு நாமும் ஒரு கம்பீரமான சல்யூட் செய்வோம்.
ஏற்கனவே இவரை பற்றி விரிவாக கதிர் இணையதளத்தில் "சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஹீரோ திரு. பொன் மாணிக்கவேலின் சாதனைகள் : ஒரு சிறப்பு பார்வை" என்ற தலைப்பில் கட்டுரையை பிரசுரித்து இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story