Top
undefined
Begin typing your search above and press return to search.

கதர் ஆடைகள் விற்பனையில் 10 ஆண்டுகளில் காங்கிரசால் செய்ய முடியாததை 3 ஆண்டுகளில் செய்து முடித்த மோடி சர்க்கார்

கதர் ஆடைகள் விற்பனையில் 10 ஆண்டுகளில் காங்கிரசால் செய்ய முடியாததை 3 ஆண்டுகளில் செய்து முடித்த மோடி சர்க்கார்

SG SuryahBy : SG Suryah

  |  1 Dec 2018 3:26 PM GMT

கடந்த நான்கு ஆண்டுகளாக மோடி சர்க்காரால் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வரும் காதி துணி விற்பனை மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதை தற்போது அனைவரும் உண்மை என ஒப்புக் கொண்டு வருகின்றனர். கிராமிய கைத்தொழில் கார்ப்பரேஷனை (கே.ஐ.வி.வி) ஒட்டுமொத்தமாக ஊக்குவிப்பதற்காக பிரதமர் மோடி அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல்வேறு புதுமையான நடவடிக்கைகளால் மட்டுமே இது சாத்தியமானது. மோடி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னரே இடையில் நின்று போயிருந்த இந்தியாவின் கதர் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டு தற்போது மக்களிடையே காதி பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்களின் பிரபலமான மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் காதி ஆடைகள் மற்றும் தயாரிப்புகளை தத்தெடுக்க அவர் இந்திய மக்களுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தார். அவரது வானொலி உரையாடல்கள் மற்றும் அவரது சமூக ஊடக தொடர்புகளில் காதி உங்களின் இன்றைய ஆடை என்றார்.
மேலும் காதி உங்கள் ‘ஃ பேஷன் , அதுதான் இன்றைய நேஷன்’ எனவும் அவர் கோஷமிட்டதன் விளைவாகவும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காதிக்கு ஒரு மறுபிறவி கிடைத்துள்ளது எனலாம். குஜராத், மகாராஷ்டிரா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் சமீபகாலங்களில் காதி மீதான மக்கள் பார்வை மிகவும் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த போதே மகாத்மா காந்தியின் பெயரை நினைவு கூர்ந்து அவரின் காதி கனவை நிறைவேற்ற மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். குறிப்பாக அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகத்துக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது காதி உடை அணிந்து வந்தால், குஜராத்துக்கும், பாரதத்துக்கும் சிறப்பு சேர்க்கும் என்றார். அவர் சொன்ன அடுத்த சில தினங்களிலேயே அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் கதர் ஆடையுடன் அலுவலகம் வந்தனர். குஜராத்தை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திலும் அரசு ஊழியர்கள் மட்டும் அன்றி தனியார் ஊழியர்களும் மோடி அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து காதி உடையை அணிந்து சிறப்பு சேர்த்தனர். உண்மையில் மோடி அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகுதான் காந்திஜியின் கதர் கனவை நிறைவேற்றும்   மறு அத்தியாயம் தொடங்கியது .
இதை நிரூபிக்கும் வகையில் கடந்த 2004-14 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கதர் வளர்ச்சி மற்றும் நவம்பர் 2015 முதல் பிப்ரவரி 2018 வரை காதிதொழில் வளர்ச்சி குறித்த புள்ளி விபரங்களை காணும் போது உண்மையில் மாற்றத்துக்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்களை தெரிந்து கொள்ள முடியும். காங்கிரஸ் ஆட்சியின் 10 ஆண்டுகளில் திறக்கப்பட்ட மொத்த காதி பொருள்கள் விற்பனை கடைகள் 7050. ஆனால் மோடி சர்க்காரில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கூடுதலாக 1008 கடைகள் திறக்கப்பட்டு மொத்த கடைகளின் எண்ணிக்கை 8058 ஆக உயர்ந்தது. அதே சமயம் பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்ட கதர் விற்பனை காங்கிரசாரின் 10 ஆண்டுகாலத்தில் 44.7 கோடி மட்டுமே. ஆனால் மோடி சர்க்காரின் முதல் 3 ஆண்டுகளுக்குள் செய்யப்பட்ட விற்பனை 120.09 கோடிகள் இது ஒரு மாபெரும் சாதனை. இந்த சாதனையை படைக்க மோடி சர்க்காரின் அழைப்பை ஏற்று, இலட்சக்கணக்கான இரயில்வே ஊழியர்களும், மருத்துவத் துறையை சேர்ந்தவர்களும் தங்கள் சீருடை தேவைகளுக்காக கதர்பொருள்களை பயன்படுத்துகின்றனர்.
மேலும் பிரதமர் மோடி அவர்கள் யோகாவை பிரபலப்படுத்தியதன் மூலம் அதற்கான சீருடையாக கதர் ஆடையே பலரும் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் மட்டும் 3.41 ரூபாய் அளவுக்கு விற்பனையாகியுள்ளது. காங்கிரசாரின் 10 ஆண்டுகளில் ஒரே ஒரு இராட்டை கூட விற்பனையாகவில்லை. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,063 இராட்டைகள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து காந்திஜி அவர்களின் கனவான கதருக்கு மோடி சர்க்கார் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஏனெனில் இந்த ஊக்குவிப்பு மற்றும் வளர்ச்சியின்  மூலம் கோடிக்கணக்கான கை நெசவாளிகள், கை வினைஞர்கள் பயன்பெறுவதன் மூலம் கிராமங்கள் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story