Top
undefined
Begin typing your search above and press return to search.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் உயர்வு..!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் உயர்வு..!

SG SuryahBy : SG Suryah

  |  1 Dec 2018 12:48 AM GMT


கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் காணப்பட்ட மாறுபாடு, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணிகளால், ஒவ்வொரு நாடுகளின் நாணய மதிப்பில் மாறுபாடு காணப்பட்டது.
இதனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டது. கடந்த அக்டோபம் மாதம் 11-ஆம் தேதி முன் எப்போதும் இல்லாத அளவாக, 74 ரூபாய் 48 காசுகள் அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்தது. இந்தச்சூழலில், பன்னாட்டு அளவில், கச்சா எண்ணெய் உற்பத்தி விலை சரியத் தொடங்கியதால், எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா வழங்கும் அந்திய செலாவணி கையிருப்பு அதிகரித்தது.


இதன் எதிரொலியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில நாட்களாக, படிப்படியாக உயர்ந்து வந்த இந்திய ரூபாயின் மதிப்பு, முந்தைய நாளை விட 75 காசுகள் உயர்ந்து வியாழக்கிழமை, 69 ரூபாய் 86 காசுகளாக அதிகரித்தது.
Next Story