Top
undefined
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்ததைக் காட்டும் ஜிடிபி புள்ளி விவரங்கள் உண்மையே - நிதி ஆயோக் துணை தலைவர் இராஜீவ் குமார்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்ததைக் காட்டும் ஜிடிபி புள்ளி விவரங்கள் உண்மையே - நிதி ஆயோக் துணை தலைவர் இராஜீவ் குமார்

SG SuryahBy : SG Suryah

  |  1 Dec 2018 12:44 AM GMT

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார வளர்ச்சி குறித்து இப்போது புதிய சர்வே முறைப்படி திருத்தி வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் சரியே என்று நிதி ஆயோக் துணை தலைவர் இராஜீவ் குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய புள்ளியியல் நிறுவனம் அறிக்கை ஒன்றை புதன்கிழமை வெளியிட்டது.
அதில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.7 சதவீதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்பு, 10 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 7.75 சதவீதமாக இருந்தது எனக்கு கணக்கிடப்பட்டிருந்தது. அதாவது, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்கெனவே கூறப்பட்டதை விட குறைவாகவே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருத்தி வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் சரியே என்று நிதி ஆயோக் துணை தலைவர் இராஜீவ் குமார் பேட்டி எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் "மத்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட அந்த புள்ளி விவரங்கள் சரியானவைதான். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் பிற அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுவது போல புள்ளி விவர தரவுகள் செயற்கையாக புனைந்தது அல்ல.  மிகவும் நிபுணத்துவம் பெற்ற 10 புள்ளி விவர வல்லுனர்களைக் கொண்டு இந்த தரவுகள் பெறப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த மதிப்பீடுகளை தயார் செய்தது நிதி ஆயோக் அல்ல. கடந்த 30 மாதங்களில், மத்திய புள்ளியியல் அலுவலகத்தில் (சி.எஸ்.ஓ) உள்ள வல்லுநர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் தகுதியுள்ளவர்களால் இது தயார் செய்யப்பட்டது. தரவுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் அதை அரசியல்மயமாக்கக் கூடாது. அவர்கள் தரவின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும், தரவுகளின் மீது ஒரு ஹாக் கண் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும்.
அதே சமயம் முந்தைய புள்ளி விவரங்களை(காங்கிரஸ் ஆட்சி காலம்) சேகரிக்கும் போது தற்கால விவரங்களை விட்டுவிட்டு மிகவும் பழமையான விபரங்களைக் கொண்டு(1993) வந்து சேர்த்துள்ளார்கள். முந்தைய புள்ளி விபரம் சேகரிக்கும் முறை  உற்பத்தியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டது. தற்போதைய புள்ளி விபரங்கள் சேகரிக்கும் முறை விற்பனை வரி விதிக்கப்பட்ட பண்டங்கள் மற்றும் சேவையின் மதிப்பில் இருந்து சேகரிக்கப்படுகிறது. இந்த முறையில்தான் ஒரு நாட்டின் ஜி.டி.பி புள்ளிவிபரம் கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா சபை கூறி உள்ளது. இந்த புதிய அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவின்படி திருத்தி வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் சரியே என்று நிதி ஆயோக் துணை தலைவர் இராஜீவ் குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Next Story