Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜி.எஸ்.டி போன்று, சுகாதாரம், விவசாயத்துறையில் ஒருங்கிணைந்த அமைப்பு வேண்டும் - அருண் ஜெட்லி

ஜி.எஸ்.டி போன்று, சுகாதாரம், விவசாயத்துறையில் ஒருங்கிணைந்த அமைப்பு வேண்டும் - அருண் ஜெட்லி

SG SuryahBy : SG Suryah

  |  1 Dec 2018 12:51 AM GMT

மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிப்ரவரி முதல் தேதியன்று இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனையடுத்து 2019 - 20 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இதற்கான பணிகளில் நிதித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர் என்று அருண் ஜெட்லி முன்னதாக தெரிவித்திருந்தார். பல்வேறு அமைச்சகங்களுடன் நிதியமைச்சகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது இவர் தாக்கல் செய்ய உள்ள ஆறாவது பட்ஜெட் ஆகும். டெல்லியில் நடைபெற்ற சுகாதார கருத்தங்கில் பங்கேற்று பேசிய அவர், ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் மத்திய, மாநில வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்றார்.


இதே போன்று சுகாதாரம் மற்றும் விவசாயத்துறைகளில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுத்தால் நாட்டுக்கு நலன் பயக்குமென அவர் குறிப்பிட்டார். ஒரே அமைப்பின் கீழ் சுகாதார, விவசாயத்துறைகளை கொண்டு வந்தால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே திட்டம் அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Next Story