Top
undefined
Begin typing your search above and press return to search.

மாணவர் சேர்க்கை குறைவதை காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூட மோடி சர்க்கார் வைத்தது ஆப்பு: ஒரே ஒரு மாணவன் படிக்கும் பள்ளிகளும் தொடர்ந்து செயல்பட மானிய உதவி அறிவிப்பு

மாணவர் சேர்க்கை குறைவதை காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூட மோடி சர்க்கார் வைத்தது ஆப்பு: ஒரே ஒரு மாணவன் படிக்கும் பள்ளிகளும் தொடர்ந்து செயல்பட மானிய உதவி அறிவிப்பு

SG SuryahBy : SG Suryah

  |  1 Dec 2018 12:57 AM GMT

இந்தியாவில் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் நகரப்பகுதிகளிலும், சில ஊரகப் பகுதிகளிலும் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதைக் காரணம் காட்டி செலவுகளை தவிர்ப்பதற்காக மாநில அரசுகள் பள்ளிகளை மூடி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே தவறாக தூண்டிவிடப்படும் ஆங்கில மோகத்தின் காரணமாக அதிக அளவில் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கு இங்குள்ள ஒரு சில தாய் மொழி ஆர்வலர்கள் எதிர்த்து குரல் கொடுத்தாலும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படும் இங்குள்ள அரசியல்வாதிகளில் பலர் இந்த அவலத்தை எதிர்த்து குரல் கொடுப்பதில்லை.
இந்த நிலையில்  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் ஒரே ஒரு மாணவர் படிக்கும் பள்ளிகளுக்குக் கூட  அந்த பள்ளிகள் தொடர்ந்து பயன்பெற மத்திய அரசு புதிய திட்டத்தின்படி மானியம் ஒதுக்கியுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் 2018-19 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தமிழகத்தில் பள்ளி மானியமாக 31,266 அரசு துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 97 கோடியே 18 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரைவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. இதில், 15 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே மானியம் வழங்க செப்டம்பரில் ஒப்புதல் கிடைத்தது.
இதன்படி 28,263 பள்ளிகளுக்கு 89 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இதில் 15 முதல் 100 மாணவர்கள் பயிலும் 21,378 பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், 101 முதல் 250 பேர் பயிலும் பள்ளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய், 251 முதல் ஆயிரம் பேர் வரை பயிலும் பள்ளிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய், ஆயிரத்திற்கும் மேல் பயிலும் பள்ளிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டன. 15 மாணவர்களுக்கும் கீழ் பயிலும் 3000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மானியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டது. தற்போது ஒன்று முதல் 14 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு தலா 12,500 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரம் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story