Top
undefined
Begin typing your search above and press return to search.

சி.பி.ஐ-யின் நடவடிக்கைகளால் கோபமடைந்த எனது வாடிக்கையாளர்கள் மூலம் எனது உயிருக்கு ஆபத்து : இந்தியா திரும்ப மாட்டேன் என நீரவ்மோடி பிடிவாதம்

சி.பி.ஐ-யின் நடவடிக்கைகளால் கோபமடைந்த எனது வாடிக்கையாளர்கள் மூலம் எனது உயிருக்கு ஆபத்து : இந்தியா திரும்ப மாட்டேன் என நீரவ்மோடி பிடிவாதம்

SG SuryahBy : SG Suryah

  |  1 Dec 2018 3:40 PM GMT

சி.பி.ஐ எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த தனது வாடிக்கையாளர்களால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் இந்தியாவுக்குத் திரும்ப மாட்டேன் என்று அமலாக்கத் துறைக்கு நீரவ் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹13,600 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடி தலைமறைவானவர் நீரவ் மோடி. இவர் மீதும் மேஹுல் சோக்சி ஆகியோர் மீது கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இவருடைய சொத்துக்களை முடக்கி, இவரை கண்டிபிடிக்கும் தீவிர நடவடிக்கைகளிலும் மத்திய புலனாய்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில், இவர் அமலாக்கத் துறைக்கு அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில், எனது நிறுவனத்தில் பணியாற்றிய ஏராளமான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை, பல நிறுவனங்களுக்கு வாடகை பாக்கி உள்ளது, சி.பி.ஐ-யால் பல வாடிக்கையாளர்களின் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பல பிரச்னைகளால், எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே தற்போதைய நிலையில் நான் இந்தியா திரும்ப மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
Next Story