Top
undefined
Begin typing your search above and press return to search.

பெட்ரோல் டீசல் விலை குறைவை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் வெகுவாக சரிந்தது

பெட்ரோல் டீசல் விலை குறைவை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் வெகுவாக சரிந்தது

SG SuryahBy : SG Suryah

  |  1 Dec 2018 3:05 PM GMT

மானியம் அல்லாத சமையல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹133 குறைக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் மானிய சிலிண்டர் விலையும் ₹6.50 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் ஓரளவு மகிழ்ச்சி தென்படத் தொடங்கியுள்ளது.  
சர்வதேச பெட்ரோலிய பொருள்கள் சந்தையில் விலைவாசி தொடர்ந்து ஏறிவந்த நிலையில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், அரபு நாட்டு தலைவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை மற்றும் ஈரானுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பில் எண்ணெய் பரிவர்த்தனை மேற்கொள்வது போன்ற காரணங்களால் கடந்த சில வாரங்களாக அவற்றின் விலை சரிந்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு மானியமற்ற சிலிண்டரின் விலை கிட்டதட்ட ₹900 ரூபாயை தாண்டியது. மானிய சிலிண்டரின் விலையும் ₹500 ரூபாயை ஐ கடந்தது. தற்போது இதன் விலைகள் வீழ்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 
Next Story