Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் முத்தரப்பு பேச்சுவார்த்தை : "ஜெய்" என பெயர் சூட்டி பிரதமர் மோடி அசத்தல்

இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் முத்தரப்பு பேச்சுவார்த்தை : "ஜெய்" என பெயர் சூட்டி பிரதமர் மோடி அசத்தல்

SG SuryahBy : SG Suryah

  |  2 Dec 2018 3:44 AM GMT

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய 3 நாடுகளின் கூட்டு என்பதையும், வெற்றி என்பதையும் ஒருங்கே குறிக்கும் வகையில், "ஜெய்"(JAI) என இந்த பேச்சுவார்த்தையை குறிப்பிட்டார். இந்தோ - பசிபிக் மண்டலத்தில் அமைதி, வளம், நிலைத்தன்மை ஆகியவற்றை பராமரிக்க உதவும் புதிய கூட்டு என்பதை இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை உலகிற்கு உணர்த்தும் என பாரத பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி நிறைவேற்றிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை டிரம்பும் ஷின்சோ அபேவும் இந்த சந்திப்பின்போது பாராட்டியதாக, வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
Next Story