Top
undefined
Begin typing your search above and press return to search.

அன்று - "தேவரை தி.மு.க பின்பற்றும்", இன்று - "தி.மு.க செல்லும் பாதையை பெரியார் திடல் தீர்மானிக்கும்" - குழம்பும் ஸ்டாலின் தவிக்கும் தி.மு.கழகம்!

அன்று - தேவரை தி.மு.க பின்பற்றும், இன்று - தி.மு.க செல்லும் பாதையை பெரியார் திடல் தீர்மானிக்கும் - குழம்பும் ஸ்டாலின் தவிக்கும் தி.மு.கழகம்!

SG SuryahBy : SG Suryah

  |  3 Dec 2018 6:00 PM GMT

முத்துராமலிங்க தேவரும் ஈ.வே.ரா-வும் கொள்கை ரீதியாக இரு துருவங்கள் என்று அனைவருக்கும் தெரியும். தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று கூறியவர் பசும்பொன் ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்கள். கடவுள் பக்தியை முழுமையாக கொண்ட முத்துராமலிங்க தேவர், ஈ.வே.ரா-வின் கடவுள் மறுப்பு கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தார். மேலும் ஈ.வே.ரா-வின் ஹிந்து மத வெறுப்பையும் பல இடங்களில் தேவர் ஐயா அவர்கள் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க இருவரின் பக்கமும் சாய்ந்து கொள்கைகளில் தடுமாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி, முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழாவும் குரு பூஜையும் கொண்டாடப்பட்டது. பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஸ்டாலின், பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகளை தி.மு.க பின்பற்றும் என
உறுதி அளித்தார்
.
நேற்று முன்தினம் திராவிடர் கழக தலைவர் சர்ச்சைக்குரிய திரு வீரமணியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அறிக்கை விடுத்த ஸ்டாலின், "நாங்கள் செல்லும் பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கிறது", என்று கூறியுள்ளார்.
இந்த கொள்கை முரண் குறித்து யாரும் கேள்வி எழுப்பாத நிலையில் FX16 நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
https://twitter.com/fx16news/status/1069598204277096449?s=20
ஈ.வே.ரா-வின் கடவுள் மறுப்பு கொள்கையையும், ஹிந்து மத வெறுப்பையும் பின்பற்றும் அதே நேரத்தில், தேவரின் கடவுள் பக்தியையும் தேச பக்தியையும் எப்படி பின்பற்ற முடியும் என்பது அடிப்படை அறிவு உள்ள எந்த தமிழனும் கேட்க தயங்க மாட்டான். தனது அடிப்படை கொள்கைகளிலேயே தி.மு.க ஆட்டம் காண்கிறதா என்ற கேள்வி அரசியல் பிரமுகர்களிடையே எழுந்துள்ளது.
Next Story